இந்தியா முழுக்க புராஜெக்ட்டுகள்... கலக்கும் கட்டுமான நிறுவனம்! - கம்பெனி பயோடேட்டா

இந்தியாவின் முன்னணி சிவில் கட்டுமான ஒப்பந்த நிறுவனங்களில் ஒன்று, அலுவாலியா கான்ட்ராக்ட்ஸ் (இந்தியா) லிமிடெட் (BSE Code: 532811, NSE Symbol: AHLUCONT).

நிறுவனத்தின் சிறப்புகள்...

சிக்கலான அமைப்புகளைக் கொண்ட கட்டுமானங்களைச் செய்து தருவதில் அனுபவம் வாய்ந்த நிறுவனம் இது. இன்ஜினீயரிங், டிசைனிங் மற்றும் கட்டுமானம் என்கிற மூன்று பிரிவுகளில் செயல்பட்டு வருகிறது இந்த நிறுவனம்.

இன்ஜினீயரிங், புரொக்யூர்மென்ட் மற்றும் கன்ஸ்ட்ரக்‌ஷன் (Engineering, Procurement, and Construction-EPC என்கிற ஒப்பந்த அடிப்படையில் கட்டுமானங் களைச் செய்துதரும் ஒரு முன்னணி நிறுவனமாகச் செயல்பட்டு வருகிறது இது.

கட்டுமானத்துக்குத் தேவையான தீர்வுகளை அதிநவீன தொழில்நுட்பத்துடன்கூடிய இயந்திரங்கள் வாயிலாக வழங்குவது, கட்டுமானத்தின் தரத்தை உறுதி செய்ய, சொந்தமாகவே தேவை யான திறன்களைக் கொண்டிருப்பது, பல்வேறுவிதமான அளவிலான கட்டுமானங்களையும் செய்துகொடுத் திருக்கும் அனுபவம் கொண்டிருப்பது, குறித்த நேரத்தில் கட்டுமானம் செய்து முடித்துக் கொடுப்பது, நீண்ட அனுபவம் கொண்ட புரொமோட்டர்களைக் கொண்டிருப்பது, தொழில் ரீதியாகத் தேவைப்படும் அனைத்துச் சேவை களுக்கும் சரியான சேனல் பார்ட்னர் களைக் கொண்டிருப்பது போன்றவை இந்த நிறுவனத்தின் அனுகூலங்களாகச் சொல்லப்படுகின்றன.

நிறுவனத்தின் வரலாறு...

1979-ம் ஆண்டில் பிரைவேட் லிமிடெட் நிறுவனமாக ஆரம்பிக்கப் பட்ட இந்த நிறுவனம், 1990-ம் ஆண்டில் பப்ளிக் லிமிடெட் நிறுவனமாக மாற்றப் பட்டது. 1996-ம் ஆண்டில் பொதுப் பங்குகளை வெளியிட்டுப் பங்குச் சந்தையில் (அன்றைய காலகட்டத்தில் டெல்லி, கொல்கத்தா மற்றும் ஜெய்ப்பூர் பங்குச் சந்தைகளில்) பட்டியலிடப் பட்டது இந்த நிறுவனம்.

2002-ம் ஆண்டில் 100 கோடி ரூபாய் என்ற அளவிலான விற்று வரவை இந்த நிறுவனம் கடந்தது. 2005-ம் ஆண்டில் 300 கோடி ரூபாய் என்ற அளவிலான விற்றுவரவைக் கடந்த இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 2006-ம் ஆண்டில் 15 கோடி ரூபாய் என்ற அளவைக் கடந்தது.

2007-ம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் பட்டிய லிடப்பட்டது. 2008-ம் ஆண்டு இந்த நிறுவனத் தின் நிகர லாபம் 50 கோடி ரூபாய் என்கிற அளவைக் கடந்தது.

2009-ம் ஆண்டில் தேசிய பங்குச் சந்தையில் இந்த நிறுவனத்தின் பங்குகள் பட்டியலிடப் பட்டன. இந்த ஆண்டில் இந்த நிறுவனத்தின் விற்றுவரவானது 1,100 கோடி ரூபாய் என்கிற அளவைக் கடந்தது.

2010-ம் ஆண்டில் டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி களுக்கான கேம்ஸ் வில்லேஜ் ஹவுஸிங் காம்ப்ளக்ஸைக் கட்டுமானம் செய்த இந்த நிறுவனம், இதே ஆண்டில் டல்கட்டோரா விளையாட்டரங்கில் டாக்டர் எஸ்.பி.எம் நீச்சல்குளம் புராஜெக்ட்டையும் காமன் வெல்த் போட்டிகளுக்காகக் கட்டுமானம் செய்தது.

2018-ம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 115 கோடி ரூபாய் என்ற அளவைக் கடந்தது. 2022-ம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் விற்றுவரவு 2,500 கோடி ரூபாய் என்கிற அளவைக் கடந்தும் நிகர லாபம் 150 கோடி ரூபாய் என்கிற அளவைக் கடந்தும் இருந்தது.

பல்வேறு புராஜெக்ட்டுகள்...

செப்டம்பர் 2023 நிலவரப்படி, மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மஹராஜ் டெர்மினல், ஜம்முவில் உள்ள எய்ம்ஸ், பாட்னாவில் உள்ள பீகார் அனிமல் சயின்ஸ் யுனிவர்சிட்டி, குருகிராமில் உள்ள டி.எல்.எஃப் நிறுவனத்தின் ஆர்பர் புராஜெக்ட், மும்பை பரேலில் உள்ள டாடா மெமோரியல் சென்டர், குருகிராமில் உள்ள மேக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல், மும்பையில் உள்ள தாராவி வேஸ்ட் வாட்டர் ட்ரீட்மென்ட் வசதி, ஹரியானாவில் உள்ள கோரியாவாஸ் என்னும் இடத்தில் மருத்துவக் கல்லூரி, மும்பையில் உள்ள சியான் எனும் இடத்தில் எல்.டி.எம்.ஜி மருத்துவமனை, மும்பை மண்ட்லே டெப்போ போன்றவை இந்த நிறுவனத்தின் வசம் இருக்கும் கட்டுமான ஒப்பந்தங்களில் முக்கிய மானவை ஆகும்.

கட்டுமான ஒப்பந்தங்களை வைத்திருக்கும் மாநிலங்கள் வாரியாகப் பார்த்தால், ஜம்மு & காஷ்மீரில் உள்ள ஜம்மு, உத்தரகாண்டில் உள்ள டெஹ்ராடூன், இமாசலப் பிரதேசத்தில் உள்ள ஹமிர்பூர், சிம்லா, தரம்சலா, பஞ்சாபில் உள்ள மொஹாலி, சண்டிகர், உத்தரப் பிரதேசத்தில் உள்ள கிரேட்டர் நொய்டா, அஸ்ஸாமில் உள்ள போன்கைகான், ஜோர்ஹட், கெளஹாத்தி, கர்நாடகாவில் உள்ள பெங்களூரு, தெலங்கானாவில் உள்ள ஹைதராபாத், நேபாளில் உள்ள காவ்ரே போன்ற இடங்களில் தலா ஒரு புராஜெக்ட்டை இந்த நிறுவனம் செப்டம்பர் 30, 2023-ம் தேதி நிலவரப்படி கைவசம் வைத்துள்ளன

ஹரியானாவில் உள்ள குர்கானில் மூன்று, ரேவாரியில் ஒன்று, பீகாரில் உள்ள புத்தகயாவில் ஒன்று, சாப்ராவில் ஒன்று நாலந்தாவில் ஒன்று, பாட்னாவில் நான்கு, மகாராஷ்டிராவில் உள்ள மும்பையில் ஆறு, மேற்குவங்கத்தில் உள்ள கொல்கத்தாவில் ஐந்து, ஒடிசாவில் உள்ள புபனேஸ்வரில் மூன்று என்கிற அடிப் படையிலும் புராஜெக்ட்டுகளை கைவசம் வைத்துள்ளது இந்த நிறுவனம்.

கட்டுமானத் துறை என்பது இந்தியாவில் விவசாயத்துக்குப் பிறகான இரண்டாவது பெரிய வேலைவாய்ப்பை வழங்கும் துறை ஆகும். இதனால் இந்தத் துறை இந்தியப் பொருளாதாரத்தில் பெரிய அளவிலான முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தத் துறை சராசரியாக ஆண்டொன்றுக்கு 15.9% அளவிலான வளர்ச்சியைச் சந்தித்து, இந்தியாவில் 2025-ம் ஆண்டில் 1.4 டிரில்லியன் டாலர் என்ற அளவுக்கு வளர்ச்சி அடைய வாய்ப்புள்ள ஒரு துறையாகும்.

இந்த வளர்ச்சியை அடைய இன்ஃப்ராஸ்ட் ரக்சர் துறையில் 966 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான முதலீடு தேவைப்படும் என்கிறது துறை சார்ந்த அளவீடுகள். இந்திய கட்டுமானத் துறையில் 250 துணைத் துறைகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்படும் வண்ணம் இருக்கின்றன.

இந்திய ரியல் எஸ்டேட் துறையானது 2030-ம் ஆண்டுவாக்கில் கிட்டத்தட்ட ஒரு டிரில்லியன் (83 லட்சம் கோடி ரூபாய்) அமெரிக்க டாலர்கள் என்ற அளவை எட்ட வாய்ப்புள்ளது என்றும், 2025-ம் ஆண்டில் இந்திய ஜி.டி.பி-யில் இந்திய ரியல் எஸ்டேட் துறையின் பங்களிப்பானது கிட்டத்தட்ட 13% என்ற அளவில் இருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என்கின்றன துறை சார்ந்த மதிப்பீடுகள்.

வணிக உபயோகக் கட்டுமானங்களுக்கான தேவையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. 2020-ம் ஆண்டில் இந்தியாவில் உள்ள ஆறு முக்கிய நகரங்களில் மட்டும் நிகர அலுவலகப் பயன்பாட்டுக்கான கட்டடங்களின் உபயோகம் 31.9 மில்லியன் சதுர அடியாக இருந்தது.

நகரமயமாகுதல், ரயில் மற்றும் சாலைகள் விரிவாக்கங்கள் செய்யப்படுதல் போன்ற அனைத்தும் ஒருங்கிணைந்து கட்டுமானத் துறையில் வியாபார வாய்ப்பைத் தொடர்ந்து உருவாக்கிக்கொண்டே இருக்க வாய்ப்புள்ளது.

ரிஸ்க்குகள் என்னென்ன?

இன்ஜினீயரிங், டிசைன் மற்றும் கன்ஸ்ட் ரக்‌ஷன் பிரிவில் செயல்படும் அனைத்து நிறுவனங்களுக்கும் உண்டான ரிஸ்க்குகள் அனைத்தும் இந்த நிறுவனத்துக்கும் உண்டு.

பொதுவாக, கட்டுமானம் என்பது பெருமளவில் பொருளாதார வளர்ச்சியைச் சார்ந்த ஒரு துறையாகும். எனவே, ஏதாவது ஒரு காரணத்தால் பொருளாதாரம் எதிர்பார்த்த அளவில் வளர்ச்சி அடையாமல் போனாலோ, தேக்கநிலையைச் சந்தித்தாலோ அதுவும் இந்த நிறுவனத்தின் செயல்பாட்டை பாதிக்கவே செய்யும்.

கட்டுமானப் பொருள்களின் விலை உயர்வு, பணியாளர்களுக்கான சம்பள உயர்வு, கட்டுமானங்களை முடித்துத் தருவதில் ஏதாவது ஒரு காரணத்தால் உருவாகும் கால தாமதம், போட்டியாளர்கள் தரும் கடுமையான போட்டி போன்றவையும் இந்த நிறுவனத்துக் கான ரிஸ்க்குகளேயாகும்.

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

பங்குச் சந்தையில் செய்யும் முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டவை. எனவே, முதலீடு செய்யும்முன் தொடர்புடைய ஆவணங்களைக் கவனமாகப் படிக்கவும். இந்தப் பகுதியானது பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் கல்வியே இதன் நோக்கம்.

பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டவை என்பதால், எந்தவொரு பங்கையும் வாங்கும்முன் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவு செய்தபின், முதலீட்டு நடவடிக்கைகளை எடுப்பது நல்லது.

முக்கிய வாடிக்கையாளர்கள்..!

சி.பி.டபிள்யூ.டி, என்.பி.சி.சி, ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா, அதானிகனெக்ஸ் (AdaniConneX) டேட்டா சென்டர்கள், பாரதி ரியாலிட்டி, எஸ்.பி.ஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி, இன்ஃபோசிஸ், பந்தன் பேங்க், இன்ஜினீயர்ஸ் இந்தியா லிமிடெட், பிரிகேட், முனிசிபல் கார்ப்பரேஷன் ஆஃப் கிரேட்டர் மும்பை, டி.எல்.எஃப், அப்போலோ டயர், அமிட்டி யூனிவர்சிட்டி, போர்ட்டீஸ் ஹாஸ்பிட்டல்ஸ், மேக்ஸ் ஹெல்த்கேர், ஐ.ஐ.எம் நாக்பூர், ஐ.டி.சி லிமிடெட், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா, கில்லட், ஹோண்டா பவர் புராடெக்ட்ஸ் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் அலுவாலியா கான்ட்ராக்ட்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளராக இருக்கின்றன.



from Vikatan Latest news https://ift.tt/RqaUSC4

Post a Comment

0 Comments