கனமழை காரணமாக விடுமுறை அறிவிப்பு!
தமிழகத்தின் பல பகுதிகளில் மழை நீடித்து வருகிறது. டெல்டா மற்றும் வட மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. 3 நாள்களுக்கு தமிழ்நாட்டின் தென் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதனிடையே கனமழை காரணமாக சில மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி, திருவாரூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், அரியலூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
from Vikatan Latest news https://ift.tt/vQZu1as
0 Comments