கத்தாரில் அல் தஹ்ரா குளோபல் கம்பெனி என்ற தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 8 இந்திய முன்னாள் கடற்படை வீரர்களை, உளவாளிகள் எனச் சந்தேகித்து கத்தார் அரசு கைது செய்தது. அவர்களுக்குத் தூக்குத் தண்டையும் விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய வெளியுறவுத்துறையின் தலையீட்டால், இந்திய முன்னாள் கடற்படை வீரர்கள் நேற்று முந்தினம் விடுவிக்கப்பட்டு, இந்தியா வந்தடைந்தனர்.
அவர்கள் விடுவிக்கப்பட்டதற்குப் பிறகு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி, ``உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட எட்டு இந்தியக் கடற்படை வீரர்களை விடுவிக்க, நடிகர் ஷாருக் கான் உதவினார். கத்தாரின் அரசு அதிகாரிகளிடம் வெளியுறவுத் துறை அமைச்சரகம் பேசியதில் உடன்பாடு எட்டப்படாததால், பிரதமர் மோடி, சினிமா நட்சத்திரமான ஷாருக் கானின் உதவியை நாடினார்
அதனால்தான் கடற்படை அதிகாரிகளை விடுவிக்க கத்தார் அரசு முன்வந்தது" எனக் குறிப்பிட்டிருந்தார். சுப்பிரமணியன் சுவாமியின் கருத்தை மறுத்து, ஷாருக்கானின் மேலாளர் பூஜா தத்லானி இன்ஸ்டாகிராமில் அறிக்கை ஒன்றைப் பகிர்ந்திருக்கிறார். அதில்,``கத்தாரிலிருந்து இந்தியக் கடற்படை அதிகாரிகளை விடுவிப்பதில் ஷாருக் கானின் தலையீடு இருப்பதாக சில தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அத்தகைய கூற்றுக்கள் அனைத்தும் ஆதாரமற்றவை.
இந்திய அரசின் அதிகாரிகளும் சந்தேகத்திற்கிடமின்றி இதை மறுக்கிறார்கள். இந்திய முன்னாள் கடற்படை வீரர்கள் விடுவிப்பு விவகாரத்தின் அனைத்து விஷயங்களும் மிகவும் திறமையான தலைவர்களால் சிறப்பாகச் செயல்படுத்தப்படுகின்றன. பல இந்தியர்களைப் போலவே ஷாருக் கானும் முன்னாள் கடற்படை அதிகாரிகள், வீட்டில் பாதுகாப்பாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறார். அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY
from Vikatan Latest news https://ift.tt/LVKydRa
0 Comments