கன்னியாகுமரி: ரேசில் வந்த புதுமுகங்கள்... அலர்ட் ஆன பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் தேர்வான பின்னணி!

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஏற்கனவே 9 முறை நாடாளுமன்ற தேர்தலிலும், ஒரு முறை சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்டவர். நாடாளுமன்ற தேர்தலில் இரண்டு முறை வெற்றி பெற்று, இரண்டு முறையுமே மத்திய இணை அமைச்சராக பதவி வகித்து வந்தார். அவருக்கு 72 வயது ஆகிவிட்டது என்பதால் இந்த முறை அவர் போட்டியிட வாய்ப்பு குறைவு என்றே பா.ஜ.க-வினர் ஆரம்பத்தில் பேசி வந்தனர்.

விஜயதரணி, தமிழிசை செளந்தரராஜன்

அதிலும், ஜவான் ஐயப்பன் உள்ளிட்ட சில நிர்வாகிகள் அண்ணாமலையிடம் நெருக்கம் காட்டி சீட் பெற்றுவிடலாம் என காய்நகர்த்தி வந்தனர். இதற்கிடையே காங்கிரஸில் இருந்து விஜயதரணி பா.ஜ.க-வுக்கு வந்ததும் அவருக்கு சீட் வழங்கப்படலாம் என்ற பேச்சு எழுந்தது. கட்சியில் சேர்ந்தபிறகு கன்னியாகுமரி மாவட்டம் வந்த விஜயதரணிக்கு பா.ஜ.க-வினர் அளித்த அதிரடி வரவேற்பும், பிரதமர் மோடி கன்னியாகுமரியில் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் விஜயதரணிக்கு மேடையில் இருக்கை ஒதுக்கி, பேசுவதற்கு அனுமதி வழங்கப்பட்டு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதும் அந்த கருத்துக்கு வலு சேர்த்தது.

இந்த நிலையில் விஜயதரணி தரப்பும் கன்னியாகுமரி மாவட்டத்தில் சங் பரிவார் நிர்வாகிகளிடம் ஆதரவு திரட்டிவந்தார். எனவே விஜயதரணி வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்ற பேச்சு எழுந்தது.

கன்னியாகுமரியில் நடந்த பிரதமர் மோடி பொது கூட்டத்தில் கலந்துகொண்டு திரும்பிய அண்ணாமலை, சில கட்சி நிர்வாகிகளிடம், குமரி தொகுதி வேட்பாளர் விஷயத்தில் அதிரடி இருக்கும் என சூசகமாக பேசி இருக்கிறார். எனவே, புதுமுக வேட்பாளருக்கு வாய்ப்பிருப்பதாக பேச்சு ஓடியது. அதை மனதில் வைத்தே, 'இனி சட்டசபை தேர்தலில் போட்டியிடப்போவதில்லை, தலைமை முடிவு செய்தால் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்' என விஜயதரணி பேசி வந்தார். எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை செளந்தர்ராஜன் அவரது சொந்த  தொகுதியான கன்னியாகுமரியில் போட்டியிடலாம் என கூறப்பட்டது.

தேர்தல் அலுவலகம் திறந்த பொன்.ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி தொகுதி சீட் விவகாரத்தில் மாநில தலைமையின் நிலைபாட்டில் அடிக்கடி மாற்றங்கள் தென்பட்டதும், பொன்.ராதாகிருஷ்ணன் அலர்ட் ஆகியிருக்கிறார். டெல்லி சென்று  தன்னுடன் மத்திய அமைச்சர்களாக இருந்த தனக்கு நெருக்கமான சீனியர்களை சந்தித்திருக்கிறார். ஏற்கனவே நாகர்கோவிலில் நாடாளுமன்ற தேர்தல் அலுவலகத்தை திறந்து வேலையை தொடங்கியிருப்பதாகவும் டெல்லியில் தெரிவித்திருக்கிறார் பொன்னார்.

மேலும், மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து பலமுறை பேசியிருக்கிறார். நிதின் கட்கரியின் ஆதரவால் பொன்னாருக்கு மீண்டும் சீட் கிடைத்திருப்பதாக சொல்கிறார்கள் விவரம் தெரிந்த பா.ஜ.க-வினர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY



from Vikatan Latest news https://ift.tt/IYq0cyf

Post a Comment

0 Comments