``இந்தியா முழுவதும் போதை பொருள் புழக்கம்; கடத்தலை தடுப்பது மத்திய அரசின் வேலை..!” - அமைச்சர் ரகுபதி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, "தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற உடன் மாநில அளவில் போதைபொருள் தடுப்பதற்காக காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். தமிழகத்தில் போதைபொருள் நடமாட்டம் இருக்கக்கூடாது என அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, போதைபொருள் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

தமிழகம் கஞ்சா பயிரிடப்படாத பூமி. போதைபொருள் தமிழகத்தில் இருக்கக்கூடாது என்பதற்காக முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.  கடந்த அ.தி.மு.க ஆட்சியில் ஒரு அமைச்சரே கஞ்சா வியாபாரத்துக்கு உடந்தையாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இன்றைக்கு ஆளுநரே அவர்மீது வழக்குதொடர அனுமதி அளித்துள்ளார். தமிழகத்தை பொறுத்தவரை கஞ்சா, போதை பொருள் கடத்தலில் தொடர்புடைய 16 ரெளடிகளுக்கு சிவப்பு கம்பளம் விரித்து பா.ஜ.க தனது கட்சியில் சேர்த்துள்ளனர். அகில இந்திய அளவிலும் பா.ஜ.க-வில் உள்ளவர்கள்தான் அதிகமாக போதைபொருள் கடத்தல் தொழிலில் இருப்பவர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

நாகர்கோவில் மேயர் மகேஷ் அமைச்சர் ரகுபதியை வரவேற்றார்.

நீண்ட கடற்கரையை கொண்ட பிரதமர் மோடியின் மாநிலமான குஜராத்தின் அதிக அளவு போதைபொருள் கடத்தல் நடக்கிறது. அதிலும் அவர்களின் தேவ பூமியான துவாரகாவில் போதைபொருள் கடத்தியதாக மூன்றுபேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பா.ஜ.க-வில் உள்ளவர்கள் போதை பொருள் கடத்துவதையும், அவர்கள் ஆளும் குஜராத்தில் போதைபொருள் கடத்துவதையும் அண்ணாமலை தடுக்கட்டும். இந்தியா முழுவதும் போதை பொருள் புழக்கம் இருக்கும் நிலையில் தமிழகம் மீது மட்டும் பழி போடுவது எதற்கு. போதை பொருள் கடத்தலை தடுப்பது மத்திய அரசின் வேலை. அதே சமயம் மாநில அரசும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம்.

இந்தியா முழுவதும் போதை பொருள் கடத்தல் கட்டுப்படுத்துவது யாருடைய வேலை அதற்கு மற்றவர் மீது பழி போடுவதுதான் மோடி ஃபார்முலாவா? பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் போதைபொருள் கடத்தலை தடுக்கட்டும். தமிழகத்தில் தி.மு.க போதை பொருளை தடுக்க வேண்டும் என போராடி வருகிறது. அண்ணாமலைக்கு போதை பொருள் நடமாட்டம் இருப்பது தெரிய வந்தால் அதனை அரசுக்கு தெரிவிக்க வேண்டும். அப்படி தெரிவிக்கவில்லை என்றால் அது தவறு.

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர் சந்திப்பு

குற்றப் பின்னணி இருப்பவர்களை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்ற அவசியம் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இல்லை. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லம் தோறும் கல்வி திட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக இல்லம் தோறும் குட்கா என பேசியுள்ளார். அவர் மீது வழக்கு இருக்கிறது என்பதை மறந்து அப்படி பேசுகிறார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை பொறுத்தவரை தேர்தலுக்கு தேர்தல் எய்ம்ஸ் வரும். தேர்தல் முடிந்தவுடன் எய்ம்ஸ் போய்விடும். துறைமுகம்,  ரயில் நிலையம் , விமான நிலையம் இவற்றையெல்லாம் தனியாருக்கு வழங்கியதால் அதன் கட்டுப்பாடு அரசிடம் இல்லை. ஆனால், அவற்றின் பராமரிப்பு வேலையை மத்திய அரசு செய்கிறது. இதற்காக தான் தனியார்மயத்தை எதிர்க்கிறோம். செந்தில் பாலாஜி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தவுடன் அவருக்கு பிணை கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY



from Vikatan Latest news https://ift.tt/LovTIeY

Post a Comment

0 Comments