அதானி பங்குகள் கடும் சரிவு..
அதானி குழுமம் இந்தியாவில் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததா என அமெரிக்கா தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனமாக இல்லாவிட்டாலும்கூட, ஒரு வெளிநாட்டு நிறுவனத்தில் அமெரிக்க முதலீட்டாளர்கள் முதலீடு செய்திருந்தால், அந்த நிறுவனம் குறித்து விசாரணை நடத்துவதற்கு அமெரிக்க சட்டம் அனுமதி அளிக்கிறது.
எனவே, மின்சக்தித் திட்டம் தொடர்பாக அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கப்பட்டதா என அதானி குழுமம் மற்றும் அதன் தலைவர் கவுதம் அதானி குறித்து அமெரிக்கா விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.
எனினும், இந்தத் தகவலை அதானி குழுமம் மறுத்துள்ளது. ஆனாலும், மார்ச் 18-ம் தேதி அதானி குழுமத்தை சேர்ந்த அனைத்து பங்குகளும் இறக்கம் கண்டிருக்கின்றன.
பூனாவாலா ஃபின்கார்ப் பங்கு விலை உயர்வு..
ஹெச்.டி.எஃப்.சி பேங்க் குழுமத்தின் தலைவர் அரவிந்த் கபில், பூனாவாலா ஃபின்கார்ப் (Poonawalla Fincorp) நிறுவனத்தின் சி.இ.ஓ மற்றும் மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். வரும் ஜூன் 24-ம் தேதி அவரது ஐந்து ஆண்டு பதவிக்காலம் தொடங்குகிறது.
பூனாவாலா ஃபின்கார்ப் நிறுவனத்தின் தற்போதைய சி.இ.ஓ அபய் புடாடா பணி ஓய்வுபெறுவதால்ம் இந்த மாற்றங்கள் நடந்துள்ளன.
அரவிந்த் கபில் இதற்குமுன் ஹெச்.டி.எஃப்.சி பேங்கின் 7.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டுக் கடன் பிரிவை நிர்வகித்து வந்தார்.
இந்த நிலையில், அவருக்கு பூனாவாலா ஃபின்கார்ப் நிறுவனம் சி.இ.ஓ பதவி கொடுத்ததற்கு சந்தை பச்சைக் கொடி காட்டியுள்ளது. இதனால் மார்ச் 18-ம் தேதி பூனாவாலா ஃபின்கார்ப் பங்கு விலை 4% மேல் உயர்ந்தது.
அதிரடி உயர்வில் ரயில்டெல் பங்கு..
ரயில்வே துறையை சேர்ந்த ரயில்டெல் (RailTel) நிறுவனம் மும்பை மாநகராட்சியிடம் இருந்து 351.95 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆர்டரைப் பெற்றுள்ளது.
இதன்படி, மும்பை மாநகராட்சியின் சுகாதாரத் துறைக்கு தேவையான சுகாதார மேலாண்மை தகவல் அமைப்புகளை ரயில்டெல் நிறுவனம் அமைக்க வேண்டும்.
2030-ம் ஆண்டு மார்ச் 14-ம் தேதிக்குள் இந்த ஆர்டர் நிறைவேற்றப்பட வேண்டும். ஏற்கெனவே மார்ச் 16-ம் தேதி ரயில்டெல் நிறுவனம் பீஹார் கல்வித் திட்ட கவுன்சிலிடம் இருந்து 130.60 கோடி ரூபாய் மதிப்புள்ள இன்னொரு ஆர்டரைப் பெற்றிருந்தது. இதனால், மார்ச் 18-ம் தேதி ரயில்டெல் பங்கு விலை சுமார் 8% வரை உயர்ந்தது.
ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் பங்கு ஏற்றம்..
பொதுத் துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் (Hindustan Aeronautics) இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்திடம் இருந்து 2,890 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆர்டரை பெற்றுள்ளது.
இதன்படி, இந்திய கடற்படைக்கு 25 Dornier விமானங்களையும், அவற்றுக்கு தேவையான உபகரணங்களையும் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும். இதற்குமுன் மார்ச் 13-ம் தேதி ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்துக்கு 8,073 கோடி ரூபாய் மதிப்புள்ள மற்றொரு ஆர்டரை பாதுகாப்பு அமைச்சகம் வழங்கியது.
இந்திய ராணுவத்துக்கும், கடலோரக் காவல்படைக்கும் 34 ஹெலிகாப்டர்களை ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும்.
இப்படி தொடர்ந்து ஆர்டர்கள் குவிந்து வரும் நிலையில், மார்ச் 18-ம் தேதி ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் பங்கு சுமார் 2.7% உயர்ந்துவிட்டது.
டி.சி.எஸ் பங்குகளை விற்கும் டாடா..
டாடா குழுமத்தின் கீழ் இந்தியாவின் மிகப்பெரிய ஐ.டி நிறுவனமான டி.சி.எஸ் (TCS) இயங்கி வருகிறது.
இந்த நிலையில், டாடா சன்ஸ் குழுமம் சுமார் 2.34 கோடி டி.சி.எஸ் பங்குகளை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளதாக Bloomberg நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. டி.சி.எஸ் பங்குகள் விற்பனை மூலம் சுமார் 1.1 பில்லியன் டாலர் திரட்டுவதற்கு டாடா குழுமம் திட்டமிட்டுள்ளது.
ஒரு பங்கு 4001 ரூபாய் என்ற விலைக்கு இந்த வர்த்தகம் நடைபெற இருப்பதாக தெரிகிறது. மேலும், மொத்த விற்பனை (Block Deal) வாயிலாகவே டி.சி.எஸ் பங்குகளை டாடா சன்ஸ் விற்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மார்ச் 18-ம் தேதி வர்த்தகம் முடிவில் டி.சி.எஸ் பங்கு விலை 4152.50 ரூபாயாக உள்ளது.
Data in this section is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume-based parameters
Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exists no conflict of interest that can bias his views in this report. The Analyst does not hold any share(s) in the company/ies discussed.
General Disclaimer and Terms & Conditions of the research report
INVESTMENT IN SECURITIES MARKET ARE SUBJECT TO MARKET RISKS. READ ALL THE RELATED DOCUMENTS CAREFULLY BEFORE INVESTING. Registration granted by SEBI and certification from NISM in no way guarantee performance of the intermediary or provide any assurance of returns to investors. For a detailed disclaimer and disclosure please visit https://ift.tt/8Wm67uQ. Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances.
One year Price history of the daily closing price of the securities covered in this section is available at https://ift.tt/GYerm4T (Choose the respective symbol) /name of company/time duration)
முதலீடு செய்வதற்குமுன், செபி பதிவு பெற்ற இன்வெஸ்ட்மென்ட் அட்வைசரிடம் கலந்தாலோசிக்க முதலீட்டு முடிவை எடுக்க வேண்டும். சரியான வாய்ப்புகளுக்காகக் காத்திருந்து அந்த வாய்ப்புகள் கிடைக்கும்போது குறைந்த எண்ணிக்கையில் வாங்குவது லாபகரமாக இருக்கும்.
from Vikatan Latest news https://ift.tt/omXOgPt
0 Comments