கேரள மாநிலத்தில் உள்ள 20 நாடாளுமன்ற தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு நள்ளிரவு 11.43 மணிக்கு நிறைவடைந்தது. மாலை 6 மணி ஆனதும் பூத்துகளில் கூட்டமாக நிறைந்திருந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. அனைத்து வாக்காளர்களும் ஓட்டுப்போட்டு முடிப்பதற்கு நள்ளிரவு 11.43 மணி ஆனது. வடகரா நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட குற்றியாடி முடப்பிலாவில் எல்.பி ஸ்கூலில் 141-வது பூத்தில் கடைசி வாக்கு பதிவானது.

நேற்று நள்ளிரவு நிலவரப்படி 70.80 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. தபால் வாக்குகளையும் சேர்க்கும் போது வாக்கு சதவீதம் சுமார் 72 சதவிகிதம் வரைச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த தேர்தல்களை கணக்கிடும்போது இந்த முறை வாக்குப்பதிவ் குறைந்துள்ளது. 2019 நாடாளுமன்ற தேர்தலில் 77.84 சதவிகிதம் வாக்குபதிவாகியிருந்தது. 2021-ம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் வாக்குப்பதிவு நடந்த நிலையிலும் கேரளாவில் 74.06 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. 77.63 சதவிகிதம் வாக்குகள் பதிவான வடகர தொகுதி மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளது. 77.23 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி கண்ணூர் தொகுதியில் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது. பத்தனம்திட்டா தொகுதியில் மிகவும் குறைவாக 63.35 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
சில பூத்துகளில் தங்கள் வாக்களித்த சின்னத்திற்கு இல்லாமல் வேறு சின்னத்திற்கு வாக்கு பதிவு ஆவதாக புகார்கள் எழுந்தன. பத்தனம்திட்டா தொகுதியில் வேறு சின்னத்தில் வாக்களித்தால் வி.வி பேட்டில் தாமரை சின்னம் தெரிந்ததாக காங்கிரஸ் வேட்பாளர் ஆன்றோ ஆண்டனி புகார் கூறினார். இடுக்கி தொகுதியில் கள்ள ஓட்டுபோடுவதற்கு முயன்ற சி.பி.எம் கிளைச் செயலாளர் பிஜூ என்பவர் கைது செய்யப்பட்டார். கோழிக்கோடு தொகுதியில் நாதாபுரம் பகுதியைச் சேர்ந்த ஹாசிமின், வெள்ளியோடு ஸாலிஹி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

வாக்குப்பதிவு தினமான நேற்று வெயில் காரணமாக கேரளாவில் 9 பேர் மயங்கி விழுந்து மரணம் அடைந்தனர். பிமேஷ்(42), மாமி(63), கண்டன்(73), அனீஷ் அஹம்மது(71), சந்திரன்(68), சித்திக்(63), சோமராஜன்(82), செயித் ஷாஜி(75), சபரி(32) ஆகிய 9 பேர் இறந்துள்ளனர். அதில் வாக்களித்துவிட்டு வீடு திரும்பிய பாலக்கட்டைச் சேர்ந்த் 32 வயது சபரி என்ற இளைஞர் இறந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இறந்தவர்களில் 3 பேர் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் மலப்புறம், கோழிக்கோடு, ஆலப்புழா மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs
from Vikatan Latest news https://ift.tt/4zuqLwf
0 Comments