பொதுவாக, இதழின் வாசிப்பனுபவம் விருந்து என்றால், அதில் நடத்தப்படும் போட்டி இலையில் வைக்கப்படும் இனிப்பு போன்றது வாசகர்களுக்கு. ஒவ்வொரு முறையும் அதில் உங்களது உற்சாகமான, சந்தோஷமான பங்கேற்பை பார்த்துள்ளோம். இதழ்தோறும் ஒரு போட்டி அறிவிக்கப்பட இருக்கிறது. வெற்றியாளருக்கு வெள்ளி நாணயம் பரிசாக வழங்கப்படவிருக்கிறது!
இந்த இதழில்... உணவு... வீணாக்குவதற்கு அல்ல!
‘உணவுப் பொருள் பற்றாக்குறை’ என்று ஒருபக்கம் பேசப்படுகிறது. மறுபக்கமோ... கொஞ்சம்கூட குற்ற உணர்ச்சியின்றி... உணவுப் பொருள்களை வீணாக்குவது தொடர்கிறது. வீடுகள், அலுவலகங்கள், உணவகங்கள், விசேஷங்கள், பொது நிகழ்ச்சிகள், அரசு உணவுக் கிடங்குகள் என்று எல்லா இடங் களிலும் உணவுப் பொருள்களை, உணவுகளை வீணடிப்பது நடக்கிறது. அதைக் கூர்மையாகச் சுட்டிக்காட்டியும், உணவுப் பொருள்களை வீணாக் காமல் இருப்பதற்கான நடைமுறைக்கு ஏற்ற மாற்று வழிகளையும் எழுதி அனுப்புங்கள்.
திருமணம் உட்பட ஏதாவதொரு நிகழ்வின்போது தயாரித்த உணவை வீணாகக் கொட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டு, அந்த உணவைச் சரியாகப் பயன் படுத்திய அனுபவம் இருந்தாலும் விவரமாக எழுதி அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த வழி காட்டல்/அனுபவத்துக்கு வெள்ளி நாணயப் பரிசு காத்திருக்கிறது.
அனுப்ப வேண்டிய முகவரி:
‘உணவு... வீணாக்குவதற்கு அல்ல’
வெள்ளி நாணயம் பரிசு
அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-600 002.
மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com
ஆசிரியர் குழுவின் முடிவே இறுதியானது.
இந்தப் போட்டிக்கான
கடைசி தேதி 07/05/2024.
*****
சென்ற இதழில் அறிவித்திருந்த `தழைக்கும் தலைமுறைகள்!’
போட்டிக்கான புகைப்படங்கள் குவிந்தவண்ணம் உள்ளன.
அந்தப் போட்டிக்கான கடைசி தேதி 23/04/2024.
from Vikatan Latest news https://ift.tt/gcD5iV4
0 Comments