Pandya: உறவினர் என நம்பி முதலீடு செய்த ஹர்திக் பாண்டியா... ரூ.4.3 கோடி மோசடி! - புகாரும் கைதும்!

கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவும், அவரது சகோதரர் க்ருணால் பாண்டியாவும் சேர்ந்து அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரர் வைபவ் பாண்டியா என்பவருடன் பிஸினஸ் ஒன்றை தொடங்கினர். இதில் ஹர்திக் பாண்டியாவும், அவரது சகோதரரும் சேர்ந்து தலா 40 சதவீதம் முதலீடு செய்தனர். வைபவ் 20 சதவீதம் முதலீடு செய்துவிட்டு கம்பெனியின் செயல்பாடுகளையும் கவனித்துக்கொண்டார். லாபத்தை முதலீட்டுக்கு தக்கபடி அவர்கள் பிரித்துக்கொண்டனர். 2021ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தில் படிப்படியாக லாபம் குறைய ஆரம்பித்தது. விசாரித்து பார்த்த போது ஹர்திக் பாண்டியாவிடம் சொல்லாமல் வைபவ் சொந்தமாக பாலிமர் விற்பனை செய்யும் தனி நிறுவனத்தை தொடங்கி இருப்பது தெரிய வந்தது.

புதிய கம்பெனி தொடங்கப்பட்டதால் பழைய கம்பெனிக்கு ரூ.3 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. அதோடு ஹர்திக் பாண்டியாவிடம் சொல்லாமல் பழைய கம்பெனியில் தனக்கான லாபத்தின் சதவீதத்தை 20 சதவீதத்தில் இருந்து 33.3 சதவீதமாக வைபவ் அதிகரித்துக்கொண்டார். மேலும் கூட்டு நிறுவனத்தின் பணத்தை அடிக்கடி தனது சொந்த நிறுவனத்திற்கு வைபவ் மாற்றினார். அப்படியே ஒரு கோடி ரூபாய் வரை மாற்றினார். இது குறித்து தெரிய வந்தவுடன் ஹர்திக் பாண்டியா வைபவிடம் கேட்டு வாக்குவாதம் செய்தார்.

உடனே உனது பெயரை களங்கப்படுத்திவிடுவேன் என்று ஹர்திக் பாண்டியாவை வைபவ் மிரட்டியதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து வைபவிற்கு எதிராக மும்பை போலீஸில் ஹர்திக் பாண்டியா புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து வைபவ்-ஐ கைது செய்து விசாரித்து வருகின்றனர். வைபவ் மொத்தம் 4.3 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளதாக ஹர்திக் பாண்டியா குற்றம் சாட்டி இருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY



from Vikatan Latest news https://ift.tt/nftwCuX

Post a Comment

0 Comments