திருச்சி விமான நிலையத்திற்கு இலங்கை, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து நேரடியாக விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல், உள்நாட்டு விமானங்களும் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு இ - சிகரெட்டுகள் கடத்தப்படுவதாக வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், கோலாலம்பூரிலிருந்து மலிண்டோ விமானத்தில் திருச்சி வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, அந்த விமானத்தில் பயணம் செய்து வந்த இரண்டு பயணிகளை சோதனை செய்த போது அவர்கள் உடமையில் தடை செய்யப்பட்ட இ - சிகரெட்டுகள் 1,285 எண்ணிக்கையில் இருந்துள்ளது.
அதன் மதிப்பு ரூ.32 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. அந்த சிகரெட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதோடு, இ - சிகரெட்டுகளை கடத்தி வந்த அந்த இரண்டு நபர்களிடமும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது, இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள இ - சிகரெட்டுகளை மின்னணு சாதனங்கள் போல மறைத்து வைத்து கடத்தப்படுவது கண்டறியப்பட்டது. விமானத்தில் வந்த பயணிகள் ரூ. 32 லட்சம் மதிப்பிலான இ - சிகரெட்டுகளை கடத்தி வந்த சம்பவம், திருச்சி விமான நிலைய வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
from Vikatan Latest news https://ift.tt/AMcxzka
0 Comments