கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம் பொன்னாணி பகுதியில் இருந்து கடந்த 2 நாள்களுக்கு முன் இஸ்லாஹ் என்ற விசைப்படகில் 6 மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். அப்துல் சலாம் என்பவர் விசைப்படகை இயக்கினார். கரையில் இருந்து 38 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, நேற்று அதிகாலை 1 மணியளவில் விசைப்படகு மீது கப்பல் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. இந்த விபத்தில் விசைப்படகு இரண்டாக உடைந்து, படகிலிருந்த ஆறுபேரும் கடலில் விழுந்தனர். கப்பலில் இருந்தவர்கள் உடனடியாக மீட்புப்பணியில் இறங்கினர். அதில் 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இரண்டு பேர் கடலில் மூழ்கி பலியான நிலையில் அவர்களது உடல் மீட்கப்பட்டுள்ளன.
இறந்தவர்கள் பொன்னானி பகுதியை சேர்ந்த கபூர் (48) மற்றும் அப்துல் சலாம் (45) என அடையாளம் காணப்பட்டது. உயிருடன் மீட்கப்பட்டவர்கள் கரைக்கு கொண்டுவரப்பட்டு பொன்னாணி அரசு தாலுகா மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து படகில் இருந்து உயிர்தப்பிய அயூப் கூறுகையில், "கடல்வழிபாதையை கடந்து எல்லைதாண்டி வந்து கப்பல் எங்கள் படகு மீது மோதியது. நாங்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்த பகுதிக்கு கப்பல் ஏன் வந்தது என தெரியவில்லை. நாங்கள் உயிர்பிழைத்தது அதிசயமாக உள்ளது" என்றார். படகு மீது மோதிய கப்பலை கடலோர பாதுகாப்பு குழுமம் கஸ்டடியில் எடுத்துள்ளது.
விபத்து ஏற்படுத்திய கப்பல் இப்போது கொச்சி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. சாகர் யுவராஜ் கப்பல் கொச்சி துறைமுகத்தில் இருந்து மாலத்தீவுக்கு சரக்கு கொண்டு சென்றதாகவும், செல்லும் வழியில் விபத்து ஏற்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. திருச்சூர் முனய்க்கல்கடவு கோஸ்டல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
from Vikatan Latest news https://ift.tt/WmL2npC
0 Comments