facebook.com/pakshirajan.ananthakrishnan
இன்று ராகுல் காந்தி முன் பேசிய பெண்களில் பாதிக்கும் மேல் தங்கள் குடிகாரக் கணவர்களைப் பற்றிப் பேசினார்கள். தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, நாட்டிற்கே குடி ஒரு சாபக் கேடு. தமிழ்நாட்டிலாவது பெண்களிடம் சிறிது படிப்பறிவு இருக்கிறது, விழிப்புணர்வு இருக்கிறது. இங்கு பெண்கள் படும்பாடு விவரிக்க முடியாதது. எனக்குத் தெரிந்து நான் சோம்பேறி ஆண்கள் பலரைப் பார்த்திருக்கிறேன். சோம்பேறிப் பெண்களைப் பார்த்ததேயில்லை என்றுதான் சொல்ல வேண்டும் - குறிப்பாக உழைக்கும் வர்க்கத்திலிருந்து, ஒடுக்கப்பட்டவர் மத்தியிலிருந்து.
facebook.com/erodekathir
முந்தா நாள் ஏ.சி போட்டதும், இன்னிக்கு ஹீட்டர் போடுறதும்... ரெண்டும் ஒரே ஆளா!
facebook.com/வாசுகி பாஸ்கர்
அக்கா தங்கச்சிக்கு சொத்து கொடுக்காம ஏமாத்துகிறவர்கள், பங்காளி வேலி அரை அடி தாண்டி வந்துருச்சுனா கத்தி எடுத்துட்டு ஓடுகிறவர்களைக் கொண்ட பெரும்பான்மை சமூகம், ராயல்டி ஜோக்ஸ் சொல்லிக்கொண்டிருக்கிறது.
facebook.com/Kuppuswamy Ganesan
அந்தக் காலத்தில் பரமார்த்த குருவுக்கு ஐந்து சீடர்கள். இந்தக் காலத்தில் குறைந்தது 272 பேர் வேண்டுமாம்.
facebook.com/villavan.ramadoss
முதல் செய்தி, கணவன் மனைவி இருவரும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள். கடன் தொல்லையால் (2 மாத பேத்தியையும் சேர்த்து மூவரைக் கொன்று) தற்கொலை. அடுத்த செய்தி, தோராயமாக 90,000 சம்பளம் பெறும் அரசுடமை வங்கி மேலாளர்கள் ஏழரைக் கோடிக்குப் போலி நகை அடகு வைத்து மோசடி செய்திருக்கிறார்கள்.
மிடில் கிளாஸ் வட்டாரத்தில் அற மதிப்பீடுகளும் பொருளாதார நடத்தையும் மிகத் தீவிரமாக மாறிக்கொண்டு இருக்கிறது. அதன் விளைவுகளைத்தான் நாம் இப்படிப்பட்ட செய்திகளாக எதிர்கொள்கிறோம்.
facebook.com/shahjahanr
ரிப்போர்ட்டர்: அப் கி பார் 400 பார்னு சொல்றாரே? (இந்த முறை 400 தாண்டும்)
கன்னையா குமார்: உங்களுக்கு விஷயம் புரியலே. அவர் இந்த முறையும் ஆட்சிக்கு வந்தா பெட்ரோல் விலை 400 தாண்டும்னு சொல்றார்.
facebook.com/இரா. முருகவேள்
மோசமான குழந்தை வளர்ப்புக்குப் பெயர் பெற்ற நாடு இந்தியா. இங்கே மாமியார் வீட்டில் மருமகள் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படுவதே இல்லை. அவளுக்கு முறையான கவனிப்பும் அன்பும் கிடைப்பதில்லை. எனவே அம்மாவின் தனிமை, வெறுமை எல்லாம் குழந்தைகளிடம் காட்டப்படுகிறது. தெருக்களில் சின்னஞ்சிறு குழந்தைகளின் கைகளைப் பற்றி இழுத்தபடி பறிகொடுத்தது போன்ற முகத்துடன் விரைந்து நடக்கும் இளம் தாய்களைப் பார்க்கிறோம் இல்லையா...
இந்தியப் பள்ளிகள் மூர்க்கத்துக்குப் பெயர் பெற்றவை. அடி உதை திட்டு மட்டுமல்ல, கல்வி என்ற பெயரில் கண்டதைத் திணிப்பதற்கும்! குழந்தைகளை மூன்று டியூஷன் அனுப்பிவிட்டு கூடவே கராத்தே, பாட்டு கிளாஸுக்கு அனுப்பும் வெறிபிடித்த பெற்றோர் இங்கே அதிகம்.
திருமணத்துக்குப் பின்பு என்னை கவனிக்க வேண்டும் என்று மகனை பெற்றோர் செய்யும் தொல்லை இருக்கிறதே, அது பயங்கரம். இதெல்லாம் என்னவென்றே தெரியாத நிலையில் இளைஞர்கள் படும் பாடு இருக்கிறதே...
ஒரு சென்ட் பாட்டிலை உடைத்த குழந்தையை அரவணைப்பதா, மிரட்டுவதா என்பது அல்ல. மொத்த குழந்தை வளர்ப்பும் இங்கே பிரச்னையானது. இது ஒரு depressed சமூகம். உட்கார்ந்து பேசாத, அடுத்தவரைப் பற்றிச் சிந்திக்காத, புரிதல் இல்லாத உணர்வுகளின் அடிப்படையில் மட்டுமே இயங்கும் உறவுகளைக் கொண்ட சமூகம் இது. நல்ல உணவோ, போதுமான புழங்கும் இடமோ, ஓய்வோ, வாழ்க்கைக்கான பாதுகாப்போ, நடுத்தர வர்க்கத்துக்குக்கூட கிடைக்காத சமூகம் இது. இது மாறாமல் இங்கே குழந்தை வளர்ப்பு எல்லாம் matured ஆக வாய்ப்பே இல்லை.
facebook.com/Sangeetha R
10 வயசு வித்தியாசத்துல ஒரு லேடி கல்யாணம் பண்ணிடுச்சாம்... உடனே அப்யூஸ் பண்ண ஆரம்பிச்சுட்டானுக. யார்ரா இவனுகனு பாத்தா, காலங்காலமா 45 வயசு மாமனுக்கு 18 வயசு அக்கா பொண்ண கல்யாணம் பண்ணுறது, 38 வயசுக்காரனுக்கு 22 வயசு புள்ளைய கல்யாணம் பண்ணுறது, குழந்தைத் திருமணம் பண்ணுறது அப்டினு வளர்ச்சி கண்ட சமூகத்த சேந்தவனுக.
facebook.com/Sugan
‘ஒரு முக்கியமான இடத்துல இருக்கேன், அப்புறமா கூப்பிடுறேன்'னு சொல்லிட்டிருக்கப்பதான் அந்த காலி பாட்டில் மூட்டைய பிரிச்சி கொட்டுவானுங்க இந்த பார் சப்ளையர் கடன்காரனுங்க...
facebook.com/RedManoRed
ட்ரெயின்ல பக்கத்து சீட்ல ஒருத்தன் கூல் ட்ரிங்க்ஸ் குடிச்சிட்டிருந்தான். நாமளும் குடிச்சா நல்லாருக்கும்னு தோணுச்சு. அவன்கிட்ட எப்படி கேக்குறதுன்னு தெரியல. ஆசையும் அடங்கல. என்ன பண்ணுறதுன்னு புரியாம வழக்கம்போல கூகுள் பண்ணினேன். ‘உடல் பருமன் கூடும், பற்சிதைவு ஏற்படும், சுகர் வரும், இரைப்பையில் அமிலங்கள் சுரக்கும்'னு லண்டன் ஆய்வாளர்களே சொல்லியிருக்காங்க. அப்புறம் என்ன... அவனுக்காக ப்ரே பண்ணிட்டுத் தூங்கிட்டேன். பாவம் சின்னப்பயலா இருந்தான்!
twitter.com/Kozhiyaar
‘பிஸியா இருக்கேன்'னு சொன்னா ‘அப்புறம் பேசுறேன்'னு சொல்றவன் நண்பன், ‘காமெடி பண்ணாத'ன்னு பேச ஆரம்பிக்கிறவன் உயிர் நண்பன்!
twitter.com/Suyanalavaathi
ஊழல்வாதிகளிடம் இருந்து பணத்தைப் பறித்து உரியவர்களிடம் ஒப்படைப்பேன்: மோடி
# குமாரு, அப்ப 10 வருஷமா ஆட்சில இருந்தது இவர் இல்லையா?
twitter.com/gurunaatha
‘‘இதுவரைக்கும் உங்ககிட்ட பணம் கேட்டதே இல்ல’’ன்னு சொல்லி ஒருத்தன் உங்கிட்ட பணம் கேட்டான்னா, அவனுக்கு உன் இளிச்சவாய்த்தனம் லேட்டா தெரிஞ்சிருக்குன்னு அர்த்தம்!
twitter.com/kumarfaculty
விசேஷங்களில் வீடியோ, போட்டோ எடுத்தவுடன் இயல்பாய் சிரிக்கிறார்கள்!
twitter.com/IdhayaD
boomer-க்கும் rumour-க்கும் உள்ள ஒரு ஒற்றுமை... ஒன்னுமில்லாத விஷயத்தை தேவையில்லாம வாய்ல போட்டு மென்னு ஊதிப் பெருசாக்குறதுதான்!
twitter.com/balebalu
வங்கித் துறையின் நிகர லாபம் ரூ.3 லட்சம் கோடியைத் தாண்டியது: பிரதமர் மோடி
# இத்தனை லாபம் வந்திருக்கே... அப்போ இனிமே மினிமம் பேலன்ஸ் அபராதம், ATM charge, SMS charge எல்லாம் கிடையாதுன்னு தேர்தல் வாக்குறுதி கொடுக்கலாமே!
twitter.com/AalaViduraa
‘‘பூத்ல விழுந்த ஓட்டைவிட 4.7 லட்சம் ஓட்டு அதிகமா சொல்றாங்க?’’
‘‘ஏன், அந்தத் தேர்தல் ஆணையம் இல்லையா?’’
‘‘ஓட்டைக் கூட்டிச்சொல்றதே அவங்கதான்...’’
twitter.com/GOV_INDA_RAJ
ராத்திரி 10:30 மணிக்குள்ள முடிச்சுட்டானுவ, இதெல்லாம் ஒரு பைனலாடா? போன வருஷம் நாங்க விளாண்டோமே 2:00 am வரை, அதாண்டா பைனலு!
twitter.com/Kozhiyaar
இதென்னவோ கம்பீரை இந்திய அணியின் கோச்சாக தேர்வு செய்வதற்கான Script போல இருக்கு!
twitter.com/Vanambadi_Twits
மொபைலுக்கு அடிக்ட் ஆகிட்டோமேன்னு டாக்டரைப் போய்ப் பாத்தா, அவருடைய யூ டியூப் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணச் சொல்றாரு தம்பி!
twitter.com/arulrajmv1
தேர்தலில் வாக்களித்த அனைவருக்கும் நன்றி: பிரதமர் மோடி
# ஜீ, தேர்தல் ஆணையத்துக்கு நன்றி சொல்ல மறந்துட்டீங்க!
twitter.com/Anvar_officia
நகர வாழ்க்கைக்குப் பிறகு கிராமத்தில் போய் செட்டில் ஆகிடணும்னு நினைக்கிற சில மனிதர்கள் மாதிரிதான், நகரத்தில் ஓடுன பேருந்துகளும் கிராமப்புறங்களுக்குப் போய்விடுகின்றன!
twitter.com/kumarfaculty
நம் தவறுகளை நம்மிடம் மட்டும் சொல்பவர்கள், நம் பேரைக் காப்பாற்ற நினைப்பவர்கள். அடுத்தவரிடம் மட்டும் சொல்பவர்கள், நம் பேரைக் கெடுக்க நினைப்பவர்கள்!
facebook.com/writermugil
சாமானியன்: ஏம்யா இப்படி Vlog வெறி புடிச்சு அலையுறீங்க?
தட் Vlog வெறியர்: இருங்க ப்ரூ... கேமரா ஆன் பண்ணிக்கிறேன். ம்... இப்ப பேசுங்க.
facebook.com/sarav.dr
ஒருத்தனைப் பற்றி முழுசா தெரிஞ்சிக்கிறவரைக்கும், அவன் சந்தோஷமா இருக்கிற மாதிரியே தெரியுது.
Shreyas Iyer
Priyanka Mohan
காற்றை உரசும் பூ!
வெற்றிக்கனிய பறிச்சாச்சு!
S A Chandrasekhar
புது சந்தோஷம் வரும் நாளோ...
from Vikatan Latest news https://ift.tt/sxkaBYH
0 Comments