ஸ்டைலா வரப் போகுது ஸ்டைலோ! ஹோண்டாவின் பெரிய ஸ்கூட்டர்!

பெரிய சைஸ் மேக்ஸி ஸ்கூட்டர்களில் இப்போதைக்கு ஏப்ரிலியா SR160, யமஹா ஏரோக்ஸ் 155 போன்ற ஸ்கூட்டர்கள்தான் இப்போதைக்கு நம் ஊரில் ஓடிக் கொண்டிருக்கின்றன. ஹீரோவில் இருந்து ஸூம் 160 ஸ்கூட்டரும் அநேகமாக லாஞ்ச் ஆகிவிடக் காத்திருக்கிறது.

இந்த நிலையில் ஹோண்டாவில் இருந்து ஸ்டைலோ (Stylo 160) என்கிற ஸ்கூட்டரை பேட்டன்ட் செய்து வைத்திருக்கிறது. இந்தோனேஷியாவில் ஓடிக்கொண்டிருக்கும் ஸ்டைலோ ஸ்கூட்டரை, அப்படியே சில ஸ்டைல் மாற்றங்கள் செய்து, ஒரு நியோ ரெட்ரோ ஸ்கூட்டராக நம் ஊருக்குக் கொண்டு வரப் போகிறது ஹோண்டா.

ஸ்கூட்டர் செக்மென்ட்டில் கிங்காக இருக்கும் ஹோண்டா, மேக்ஸி ஸ்கூட்டர்களில் கை வைக்காமல் இருப்பது கொஞ்சம் குறைபாடுதான். அந்தக் குறையை நீக்க ஸ்டைலாக வருகிறது ஸ்டைலோ. ப்ரீமியமாகவும், பெரிய இன்ஜினுடனும் வரப் போகும் ஸ்டைலோ பற்றிப் பார்க்கலாம்.

Honda Stylo

அறுங்கோண வடிவில் எல்இடி ஹெட்லைட்களுடன் வரப் போகும் இந்த ஹோண்டா ஸ்டைலோ 160-ல் இருக்கப் போவது 156.9சிசி, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின். அட, லிக்விட் கூல்டில் வருகிறது. அதனால், ஹீட் அடிக்கும் என்கிற கவலை வேண்டாம். ஆனால், பராமரிப்பில் கொஞ்சம் பர்ஸ் பழுக்குமோ? இதில் 15.4bhp@8,500rpm பவரும், 13.8Nm@7,600rpm டார்க்கும் இருக்கும். இதில் இந்தோனேஷியாவில் ஓடுவதுபோலவே இரண்டு பக்கமும் 12 இன்ச் வீல்கள் கொடுத்தால், நம் ஊருக்கு செட் ஆகுமா தெரியவில்லை. ஏத்தர் போன்ற சின்ன ஸ்கூட்டர்களிலேயே 12 இன்ச்தான். வீல்பேஸ், நீளம், அகலம் என எல்லாவற்றிலும் ஆக்டிவாவைவிடப் பெருசாக இருக்கும் ஸ்டைலோ. சஸ்பென்ஷனைப் பொருத்தவரை வழக்கமான டெலிஸ்கோப்பிக்கும், மோனோஷாக்கும் இருக்கலாம். சிங்கிள் சேனல் ஏபிஎஸ்-உடன் வரலாம். 118 கிலோ எடையுடன் வந்தால் ஹேண்ட்லிங்குக்குப் பக்காவாக இருக்கும். இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 150 மிமீக்கு மேல் இருக்கலாம். சீட் உயரம் 770 மிமீ-க்குள் இருக்கும்.

விலை 1.40 லட்சத்துக்குள் இருந்தால் சூப்பராக இருக்கும். ஸ்டைலோ தவிர்த்து இன்னும் 4 டூவீலர்களுக்கு இந்தியாவில் காப்புரிமை வாங்கியிருக்கிறதாம் ஹோண்டா.



from Vikatan Latest news https://ift.tt/Pxuq7sn

Post a Comment

0 Comments