மதுரை: பலத்தக் காற்றுடன் பெய்த மழை; அறுந்து தொங்கிய மின்சார வயர்...தம்பதிக்கு நேர்ந்த சோகம்!

திடீர் மழை காரணமாக அறுந்து தொங்கிய மின்வயரால் மின்சாரம் தாக்கி தாய்-தந்தை, மகன் கண் முன்பே உயிரிழந்தது மதுரையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மின்சாரம்

மதுரையில் பல நாள்களாக வெயில் கடுமையாக தாக்கி வந்த நிலையில், நேற்று முன்தினம் முதல் மாலை நேரத்தில் மட்டும் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் மாலையிலிருந்து பல்வேறு பகுதிகளில் காற்று, இடியுடன் கனமழை பெய்து வந்தது.

மதுரை டி.வி.எஸ் நகர் துரைசாமி சாலைப் பகுதியில் வசித்து வந்த முருகேசன் (50), அவர் மனைவி பாப்பாத்தி (44) ஆகியோர் பலசரக்கு கடை நடத்தி வந்த நிலையில், இரவு கடையை அடைத்துவிட்டு வீட்டுக்கு பைக்கில் புறப்பட்டுள்ளனர். அவர்களை பின்தொடர்ந்து அவர்களின் மகனும் சைக்கிளில் சென்றுள்ளார்.

முருகேசன்-பாப்பாத்தி

அவர்கள் சென்ற பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்த நிலையில், மின்சார வயர் அறுந்து தொங்கியுள்ளது. இதை முன்னாள் சைக்கிளில் சென்ற மகன் பார்த்து பெற்றோரிடம் கூறவந்த சில நொடிகளில், கவனிக்காமல் பைக்கில் வந்த முருகேசன்-பாப்பாத்தி மீது மின்சார வயர் பட்டதில், இருவரும் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனை பார்த்த மகன் கூச்சலிட்ட நிலையில், அருகில் உள்ளவர்கள் சென்று பார்த்தனர். இதனையடுத்து அங்கு விரைந்துவந்த சுப்பிரமணியபுரம் காவல்துறையினர் இருவரின் உடலையும் மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பிவைத்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின்சாரம்

விபத்து நடந்த பகுதியில் தெருவிளக்கு நீண்ட நாள்களாக எரியவில்லை என பலமுறை மாநகராட்சியில் புகாரளித்தும், உரிய நடவடிக்கை எடுக்காததால் அந்தப் பகுதி முழுவதிலும் இருள் சூழ்ந்திருந்ததால், மின்சார வயர் அறுந்து விழுந்தது தெரியாமல் தம்பதியினர் உயிரிழந்ததாக... அந்தப் பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb



from Vikatan Latest news https://ift.tt/vYfbIjz

Post a Comment

0 Comments