புனே: மதுபோதையில் விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் ஜாமீன் ரத்து... சிறார் சீர்திருத்த முகாமில் அடைப்பு!

புனேயில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், பிரபல பில்டர் அகர்வால் என்பவரின் 17 வயது மகன் புதிய காரை எடுத்துக்கொண்டு நண்பர்களுடன் மது அருந்த சென்றார். ஆனால் மது அருந்திவிட்டு அதிகாலையில், சுமார் 160 கிலோமீட்டர் வேகத்தில் காரில் வந்தபோது இரு சக்கர வாகனம் ஒன்றின் மீது மோதியது. இதில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த அஸ்வினி என்பவரும் அவரது நண்பரும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். விபத்தை ஏற்பத்திய நபருக்கு 18 வயதாக இன்னும் 4 மாதம் இருக்கும் நிலையில் போலீஸார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

கோர்ட் அவருக்கு சம்பவம் நடந்த 15 மணி நேரத்தில் ஜாமீன் வழங்கியது. அதோடு குற்றத்தில் ஈடுபட்ட சிறுவன் போலீஸார் முன்னிலையில் விபத்து குறித்து கட்டுரை எழுதவேண்டும் என்று நிபந்தனை விதித்தது. இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இதனிடையே விபத்தை ஏற்பட்டுத்திய கார் டிரைவரான மைனரின் தந்தை அகர்வால் தலைமறைவானார். பின்னர் அவர் சாம்பாஜி நகரில் கைது செய்யப்பட்டார். அதோடு மைனர் சிறுவனுக்கு மது வழங்கிய இரண்டு ரெஸ்டாரண்ட்களும் மூடப்பட்டன.

Porsche Crash

இதனிடையே, மைனருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யவேண்டும் என்று கோரி போலீஸார் சிறார் நீதி வாரியத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தனர். அம்மனுவை விசாரித்த சிறார் நீதி வாரியம், விபத்தை ஏற்படுத்திய மைனருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்தது. உடனே மைனர் கைது செய்யப்பட்டு சிறார் சீர்திருத்த முகாமில் அடைக்கப்பட்டார். அவரை ஜூன் 5-ம் தேதி வரை அங்கு அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் மோனாலி தெரிவித்தார்.

இது குறித்து கூடுதல் போலீஸ் கமிஷனர் மனோஜ் பாட்டீல் கூறுகையில், ``சிறுவன் மீதான குற்றத்தை 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான வழக்காக கருதி விசாரணை நடத்த அனுமதிக்கவேண்டும் என்று கோரி சிறார் நீதி வாரியத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது” என்றார். அதோடு சிறுவனுக்கு உளவியல் சோதனை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மைனர் சிறுவனின் தந்தையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை போலீஸ் காவலில் வைக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88



from Vikatan Latest news https://ift.tt/4tnLTOy

Post a Comment

0 Comments