ஆசிரியர் பக்கம்: பொறியியல் மாணவர்களே... தயாரா?

காரை ஓட்டுவது ஒருவித மகிழ்வைக் கொடுக்கும். ஒரு கார் எப்படி வடிவமைப்படுகிறது என்பதைப் பார்ப்பது அதைவிடப் பெரிய மகிழ்வைக் கொடுக்கும். பொறியியலும், கலையும் எப்படி கைகோர்க்கின்றன என்பதை, அந்தக் காரை வடிவமைக்கும் பொறியாளர்களே சொல்லக் கேட்பது மகிழ்ச்சியின் அடுத்த கட்டத்திற்கு நம்மை இட்டுச்செல்லும். அதிலும் கார் உருவெடுக்கும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்துக்கே அவர்கள் நம்மை இட்டுச் சென்று கார் உருவான போது எதிர்கொண்ட சவால்கள், கண்டுணர்ந்த அறிவியல் அதிசயங்கள் ஆகியவற்றை விளக்கிச் சொல்லும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது.

XUV 3XO-யை உருவாக்கிய அறிவியல் அனுபவத்தை, ஆட்டோமொபைல் துறையில் ஆர்வம் கொண்ட மோட்டார் விகடன் வாசகர்களான பொறியியல் மாணவர்களோடு பகிர்ந்து கொள்ள, தன் ஆராய்ச்சி மையத்தின் கதவுகளைத் திறக்கயிருக்கிறது மஹிந்திரா. எந்த ஒரு கார் கம்பெனியின் ஆராய்ச்சி மையமானாலும் இராணுவ ரகசியம் நிறைந்த கோட்டையைப் போல பாதுகாக்கப்படும். ஆனாலும், மோட்டார் விகடன் வாசகர்களாக இருக்கும் பொறியியல் மாணவர்களின் மீது கொண்ட அக்கறையினால்தான் மஹிந்திரா இந்த வொர்க்‌ஷாப்புக்கு ஏற்பாடு செய்துள்ளது.

சென்னையை அடுத்திருக்கும் மஹிந்திரா ரிசர்ச் வேளியில் ஜூன் மாதம் 22-ம் தேதி நடக்க இருக்கும் இந்த Engineering Marvel behind Mahindra 3XO எனத் தலைப்பிட்ட Walkaround Workshop-க்கு சுமார் நூறு மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். காலை 9.30 மணியில் இருந்து மாலை 5.00 மணிவரை நடக்க இருக்கும் இந்த வொர்க்ஷாப்பில் கலந்து கொள்ள மாணவர்கள் கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை.

அடுத்துவரும் பக்கங்களில் இது குறித்து அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. விருப்பம் உள்ள மாணவர்கள், அதில் குறிப்பிட்டுள்ளபடி QR CODE-ஐ ஸ்கேன் செய்து விண்ணப்பிக்கவும். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் இதில் கலந்து கொள்வதற்கான முறையான அழைப்பு அனுப்பி வைக்கப்படும்.

- ஆசிரியர்



from Vikatan Latest news https://ift.tt/zVcgdLn

Post a Comment

0 Comments