ஹரியானா: ஆதரவை வாபஸ் பெற்ற சுயேட்சை எம்.எல்.ஏக்கள்... நெருக்கடியில் பாஜக அரசு!

2014-ல் தனிப்பெரும்பான்மையுடன் ஹரியானா மாநிலத்தில் ஆட்சியமைத்த பா.ஜ.க, 2019-ம் ஆண்டு நடந்த சட்டபேரவைத் தேர்தலில், 90 தொகுதிகளில் 40 தொகுதிகளைமட்டுமே கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து, 10 தொகுதிகளில் வென்ற ஜனநாயக ஜனதா கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்தது. இந்த நிலையில், நடந்து வரும் மக்களவைத் தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் பா.ஜ.க-வுடன் சுமூக தீர்வு எட்டப்படாததால் ஜனநாயக ஜனதா கட்சி கூட்டணியை முறித்துக்கொண்டது.

மனோகர் லால் கட்டார் - நயாப் சிங் சைனி

இதையடுத்து, பா.ஜ.க-வைச் சேர்ந்த முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன் தொடர்ச்சியாக, ஹரியானா மாநில புதிய முதலமைச்சராக நயாப் சிங் சைனி தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில், பா.ஜ.க அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றதாக சோம்பீர் சங்வான், ரந்தீர் கோலன் மற்றும் தரம்பால் கோண்டர் ஆகிய மூன்று சுயேச்சை எம்.எல்.ஏ-க்கள் அறிவித்திருக்கின்றனர்.

அதனால் ஹரியானா பா.ஜ.க அரசு பெரும்பான்மையை இழக்கும் நிலைக்கு வந்துள்ளது. இது குறித்து நயாப் சிங் சைனி செய்தியாளர்களிடம்,``காங்கிரஸ் சிலரது விருப்பங்களை நிறைவேற்றுவதில் இப்போது ஈடுபட்டிருக்கலாம். ஆனால், காங்கிரஸுக்கும் பொதுமக்களின் விருப்பத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. பொதுமக்கள் பா.ஜ.க-வைதான் விரும்புகிறார்கள்" எனத் தெரிவித்திருக்கிறார்.

ஹரியானா சுயேட்சை எம்.எல்.ஏ-கள்

இதற்கிடையில், ஹரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, மாநில காங்கிரஸ் தலைவர் உதய் பன் ஆகியோர் முன்னிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மூன்று சுயேட்சை வேட்பாளர்களும்,``நாங்கள் பா.ஜ.க தலைமையிலான அரசுக்கு வழங்கிவந்த ஆதரவை வாபஸ் பெறுகிறோம். எங்கள் ஆதரவை காங்கிரஸுக்கு நீட்டிக்கிறோம். பா.ஜ.க ஜனநாயக ஜனதா கட்சி எம்.எல்.ஏ.க்கள், சுயேட்சைகளின் ஆதரவைக் கொண்டே ஆட்சியமைத்தது.

ஆனால் ஜனநாயக ஜனதா கட்சி அதன் ஆதரவை திரும்பப் பெற்றுவிட்டது. மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதால் சில எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்திருக்கின்றனர். இப்போது இன்று வேலையில்லாத் திண்டாட்டமும் பணவீக்கமும் உச்சத்தில் உள்ளது. இதைப் பார்த்தும் விவசாயிகளின் நலன் கருதியும் பா.ஜ.க அரசுக்கு அளித்து வந்த ஆதரவை சுயேட்சைகளும் வாபஸ் பெற்றுவிட்டோம். எனவே, சட்டசபை தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். ஹரியானாவில் பா.ஜ.க-வுக்கு எதிரான சூழல்தான் நிலவுகிறது. எனவே மாற்றம் நிச்சயம்" எனத் தெரிவித்திருக்கின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88



from Vikatan Latest news https://ift.tt/imMlXzr

Post a Comment

0 Comments