விருதுநகர்: கணவனின் கண்டிப்பையும் மீறி தொடர்ந்த திருமணம் மீறிய உறவு - ஆடு வியாபாரி குத்திக்கொலை

காரியாப்பட்டி அருகே, மனைவியுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்தவர் குத்திகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், 'மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள டி.திருமால் ஊரை சேர்ந்தவர் ராமநாதன், ஆடு விற்பனை வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு முருகாயி எனும் மனைவி உள்ளனர். ராமநாதன், தொழில்ரீதியாக விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி பகுதிக்கு வந்து செல்வது வழக்கம்.‌ அந்தவகையில் இராமநாதனுக்கும், காரியப்பட்டி அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த இராமச்சந்திரன் என்பவரின் மனைவியான வைரஜோதிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இவர்களின் பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக தொடர்ந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த ராமச்சந்திரன், இருவரையும் கண்டித்துள்ளார். ஆனாலும் அந்த திருமணம் மீறிய உறவு நீடித்து வந்ததாக கூறப்படுகிறது‌.

அய்யனார்

இதனால் ஆத்திரமடைந்த ராமச்சந்திரன் தனது மகன் வீரபாண்டி, உறவினர் அய்யனார் ஆகியோருடன் சேர்ந்து டி.திருமால் ஊரில் உள்ள ராமநாதனின் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளனர். இதுதொடர்பாக ராமநாதனின் மனைவி முருகாயி, கூடக்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதற்கிடையில், தனது கணவர் ராமச்சந்திரன், டி.திருமாலில் உள்ள ராமநாதனின் வீட்டிற்கு சென்று தகராறு செய்ததை அறிந்த ராமச்சந்திரனின் மனைவி வைரஜோதி, ஆவியூர் காவல் நிலையத்தில் ஒரு புகாரை கொடுத்திருந்தார். ஆவியூர் காவல் நிலையத்தில் வைரஜோதி தரப்பில் அளிக்கப்பட்ட புகார் மனு தொடர்பான விசாரணைக்கு இருதரப்பிலிருந்தும் அழைக்கப்பட்டனர்.

கைது

அதன்படி இராமநாதன், லெட்சுமணன் என்பவருடன்‌ காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகிவிட்டு நேற்று இரவில் இருவரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள், புளியங்குளம் அருகே சென்று கொண்டிருந்தபோது அவர்களை, ராமச்சந்திரன், அவரின் மகன் வீரபாண்டி, உறவினர் அய்யனார் ஆகியோர் வழிமறித்து கீழே தள்ளியுள்ளனர். தொடர்ந்து ராமநாதனை, தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. இதில் நிலைகுலைந்து ராமநாதன் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். கொலை குறித்து தகவலறிந்த காரியாப்பட்டி போலீஸார், சம்பவ இடத்துக்கு வந்து உயிரிழந்த இராமநாதனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசுமருத்துமனைக்கு அனுப்பிவைத்தனர்.

வீரபாண்டி

மேலும் சம்பவம் தொடர்பாக முருகாயி, காரியாப்பட்டி போலீஸில் அளித்த புகாரில் பேரில், இராமச்சந்திரன், வீரபாண்டி, அய்யனார், வைரஜோதி ஆகிய 4 பேர் மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையே, கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ராமச்சந்திரன், வீரபாண்டி, அய்யனார் ஆகிய மூவரையும் பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். தனிப்படையினரின் தீவிர தேடுதல்வேட்டையின்பேரில் ராமச்சந்திரன், வீரபாண்டி, அய்யனார் ஆகிய மூவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்' என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88



from Vikatan Latest news https://ift.tt/cWt3QuH

Post a Comment

0 Comments