திருவாரூர்: பாஜக பிரமுகர்மீது மர்ம நபர்கள் கொலைவெறித் தாக்குதல் - உட்கட்சிப்பூசல் காரணமா?!

திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள காவனூர் பகுதியைச் சேர்ந்தவர் மதுசூதனன், வயது 42. இவர் பா.ஜ.கவின் முன்னாள் தொழில்நுட்ப பிரிவு மாவட்டத் தலைவர். குடவாசல் கடை வீதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு ஏழு மணியளவில் கடை முன்பு உட்கார்ந்திருந்துள்ளார். அப்போது அங்கு மூன்று டூவீலரில் வந்த ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல், மதுசூதனனை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தலை, கழுத்து, கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றனர்.

வெட்டப்பட்ட பா.ஜ.க பிரமுகர் மதுசூதனன்

ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் துடித்து கொண்டிருந்த மதுசூதனனை மீட்டு, அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்ததாக தெரிகிறது. அங்கு முதற்கட்ட சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து குடவாசல் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பா.ஜ.க பிரமுகர் வெட்டப்பட்ட சம்பவம் திருவாரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து சிலரிடம் பேசினோம், "மதுசூதனன் , லோக்கல் பா.ஜ.க நிர்வாகிகள் குறித்து அவரது முகநூல் மற்றும் சமூக வலைதள பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் தொடர்ந்து பதிவிட்டு வந்தார். நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் செலவுக்காக கொடுத்த பணத்தை மாவட்டத் தலைவர் பாஸ்கர் முறையாக செலவு செய்யவில்லை என பதிவிட்டதாகவும் இதனால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே பாஸ்கருக்கும், மதுசூதனனுக்கும் கருத்து வேறுபாடு நிலவி வந்தது.

மதுசூதனன்

இந்நிலையில் இப்பிரச்னை கட்சியின் தலைமை வரை சென்றது. ஆனால் தலைமை சொந்த பிரச்னையை கட்சிக்குள் கொண்டு வராதீர்கள் என சொல்லிவிட்டதாக தெரிகிறது. மேலும் குடவாசலை சேர்ந்த பா.ஜ.கவின் அமைப்பு சாரா தொழிலாளர் சங்க செயலாளர் ராஜசேகருக்கும், மதுசூதனுக்கும் பிரச்னை இருந்துள்ளது. தேர்தல் செலவுக்கு கொடுத்த பணத்தை நிர்வாகிகள் சிலர் சேர்ந்து பங்கு பிரித்து கொண்டதாக மதுசூதனன் தொடர்ந்து பொதுவெளியில் பேசி வந்துள்ளார். இந்நிலையில் அவர் மர்ம கும்பலால் கொலை வெறி தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார். உள்கட்சி பூசலால் கூலிப்படையை ஏவி வெட்டியதாக பேசப்படுகிறது. போலீஸ் விசாரணைக்கு பிறகே வெட்டப்பட்டதற்கான உண்மை காரணம் தெரியவரும்" என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb



from Vikatan Latest news https://ift.tt/MWQgUz0

Post a Comment

0 Comments