விற்பனைக்காக வீட்டில் மண்ணுளி பாம்பு வளர்த்து வந்தவர் உள்பட 6 பேரை வனத்துறையினர் கைது செய்திருக்கிறது. இதுகுறித்து போலீஸிடம் பேசினோம். அப்போது நம்மிடம் பேசிய வனத்துறை அதிகாரிகள், 'விருதுநகரில், விற்பனைக்காக வீட்டில் மண்ணுளி பாம்பு வளர்த்து வருவதாகவும், அதனை தற்போது விற்பனை செய்ய முயல்வதாகவும் மதுரையில் செயல்பட்டு வரும் வனக்குற்றப்புலனாய்வு பிரிவினர் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத்தொடர்ந்து வனக்குற்ற புலனாய்வுத் துறை ரேஞ்சர் சசிதரன் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ரேஞ்சர் கார்த்திக் தலைமையிலான வனக்காவலர்கள் தனி பிரிவாகவும், வனவர் பொன்னம்பலம் மற்றும் வனக்காப்பாளர் பெரியசாமி தலைமையிலானனோர் மற்றொரு பிரிவாகவும் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, விருதுநகர் பாண்டியன் நகர் பகுதியை சேர்ந்த சுரேஷ் (வயது 50) என்பவரின் வீட்டில் மண்ணுளி பாம்பு விற்பனைக்கு இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்படி அங்கு சென்று சோதனை செய்ததில் சுரேஷ் வீட்டில் சுமார் 4.500 கிலோ எடையிலான மண்ணுளி பாம்பை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, சுரேஷுடன் அவருடன் வீட்டிலிருந்த மேலும் சிலரையும் பிடித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள், விருதுநகரை சேர்ந்த ஞானசேகர் (60), மல்லாங்கிணறை சேர்ந்த அர்ஜுனன், கூமாபட்டியைச் சேர்ந்த கடற்கரை(47), ரவி(38) மற்றும் திருப்பூரைச் சேர்ந்த சேகர்(53) என்பதும், மண்ணுளி பாம்பை விலைபேச வந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து சுரேஷ் உள்பட 6 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். வனத்துறையினர் சுரேஷிடம் நடத்திய விசாரணையில், 'லாரி டிரைவரான சுரேஷ் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பாக, ஆந்திராவிலிருந்து மண்ணுளி பாம்பை கொண்டு வந்துள்ளார். தொடர்ந்து, கடந்த ஒரு வருடமாக தனது வீட்டில் வைத்து மண்ணுளிப் பாம்பை வளர்த்து வந்த அவர், பாம்பு நல்ல எடையை எட்டியதும் அதை விற்பதற்காக முயற்சி செய்த நிலையில் வனத்துறையிடம் மாட்டிக்கொண்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, பாம்பு மற்றும் அவர்கள் பயன்படுத்திய காரை பறிமுதல் செய்த வனத்துறையினர் கைதுசெய்யப்பட்டவர்களிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்' என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
from Vikatan Latest news https://ift.tt/REPtwyj
0 Comments