ஆந்திராவில் நடந்த சட்டமன்றத் தேர்தலில், சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசக் கட்சி வெற்றிபெற்றது. அதைத் தொடர்ந்து, ஆந்திர மாநிலம் கன்னாவரம் பகுதியில் சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்ற விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க. தேசிய தலைவரும், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சருமான ஜே.பி.நட்டா, முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு தெலங்கானா, புதுச்சேரியின் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
மேடையில் தமிழிசை செளந்தரராஜனை அழைத்துப் பேசிய அமித் ஷா! pic.twitter.com/cCPqNlKrWT
— @JuniorVikatan (@JuniorVikatan) June 12, 2024
அப்போது, விழா மேடையில், வணக்கம் சொல்லிச் செல்லும் தமிழிசை சௌந்தரராஜனை அழைத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அவரை கண்டிக்கும் விதமாக பேசுவது போன்றும், அதற்கு விளக்கமளிக்க முயலும் தமிழிசை சௌதரராஜனிடம் `NO... NO... NO...' என விரல்களை நீட்டிக் கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டது. அதைத் தொடர்ந்து, 'ஒரு மாநிலத்தில் கட்சித் தலைவராக இருந்தவர், இரண்டு மாநிலங்களுக்கு ஆளுநராக இருந்தவர், கட்சிக்காக கடுமையாக உழைப்பவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை விட 4 வயது பெரியவர் தமிழிசை சௌந்தரராஜன் என்ற எந்த உணர்வும் இல்லாமல், மேடையில் அவமரியாதையாக நடந்து கொண்டிருக்கிறார் அமித் ஷா.
அந்த இடத்தில் வேறு அமைச்சர்கள் இருந்திருந்தால் இப்படி நடந்திருப்பாரா அமித் ஷா... இதுதான் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு அவர்கள் தரும் மரியாதை' என சமூக வலைதளங்களில் விமர்சித்தனர். மேடையில் தமிழிசை சௌந்தரராஜனிடம் அமித் ஷா என்னப் பேசினார் என்பது குறித்த எந்த தகவலும் வெளிவராத நிலையில், `கூட்டணி விவகாரம் தொடர்பாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை குறித்து தமிழிசை சௌந்தரராஜன் சில கருத்துகளை பேசி இருந்தார். அதைதான் அமித் ஷா கண்டித்தார். அண்ணாமலைக்காக அமித் ஷாவே பேசியிருக்கிறார்' எனப் பல யூகங்களும் பேசப்பட்டது.

இந்த நிலையில், தமிழிசை சௌந்தரராஜன் தன் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில்,``2024 தேர்தலுக்குப் பிறகு முதல்முறையாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தபோது, தேர்தலுக்குப் பிந்தைய நிலைமை குறித்து கேட்க என்னை அழைத்தார். மற்றும் மிகுந்த அக்கறையுடன் அரசியல் பணிகளையும் தொகுதிப் பணிகளையும் தீவிரமாக மேற்கொள்ளுமாறும் என்னை அறிவுறுத்தினார். இந்தப் பதிவு, சமூக ஊடகங்களில் பரவிவரும் தேவையற்ற யூகங்களையும் தெளிவுபடுத்துவதற்காகும்" எனக் குறிப்பிட்டு, இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
from Vikatan Latest news https://ift.tt/Q63bktp
0 Comments