11-ம் வகுப்பு மாணவியை ஆபாச வீடியோ எடுத்து, மிரட்டி இளைஞர்கள் இருவர் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள். இந்த கொடூர சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "விருதுநகர் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 15 வயது சிறுமி, அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில், 11-ம் வகுப்பு படித்து வருகிறார். சனி, ஞாயிறு விடுமுறை தினங்களில் வீட்டிலிருக்கும் சமயங்களில் செல்போனில் யூடியூப் பார்ப்பதை சிறுமி வழக்கமாக கொண்டுள்ளார். இதனிடையே, அப்பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர், சிறுமியிடம் நட்பாக பேசி, அவரின் செல்போன் எண்ணிற்கு ஆபாச வீடியோவினை அனுப்பி பார்க்க சொல்லியிருக்கிறார். இது சில நாள்கள் தொடர்ந்திருக்கிறது.

இதை தனக்கு சாதகமாக பயன்படுத்த நினைத்த ராஜேஷ், 'ஆபாச வீடியோக்கள் தொடர்பாக, சிறுமிக்கும்-அவருக்கும் இடையே நடந்த 'சாட்டிங்'கை சிறுமியின் அண்ணனிடம் காண்பிக்கப் போவதாக சொல்லி சிறுமியை மிரட்டியுள்ளார். இதனால் சிறுமி பயந்து போகவே, அவரை தான் அழைக்கும் சமயத்தில் தன் விருப்பத்திற்கு இணங்கவேண்டும் எனக்கூறி மிரட்டியுள்ளார். தொடர்ந்து கடந்த மே மாதம், சிறுமியை அருகே உள்ள முள்காட்டிற்குள் வரவழைத்த ராஜேஷ், வலுக்கட்டாயமாக அவரை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அப்போது சிறுமியுடன் இருந்ததை வீடியோ எடுத்த ராஜேஷ், அதை தனது நண்பன் சசிகுமார் என்பவருக்கு காட்டியுள்ளார். இதையடுடுத்து சசிக்குமாரும், சிறுமி மீதான தன் இச்சையை வெளிப்படுத்தியிருக்கிறார். இதுதொடர்பாக சிறுமியிடம் பேசி மிரட்டிய இருவரும், கடந்த சில தினங்களுக்கு முன்பாக சிறுமியை அவரின் வீட்டிற்கு பின்புறமாக வரச்சொல்லி ராஜேஷும், சசிகுமாரும் மாறி, மாறி சிறுமியை கட்டாய பாலியல் வன்புகொடுமை செய்துள்ளனர்.
இதனால் மனம் விரக்தி அடைந்த அவர், நடந்த விஷயங்களை தனது பெற்றோரிடம் கூறி அழுதிருக்கிறார். இதையடுத்து சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டது தொடர்பாக, விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து ராஜேஷ்,சசிகுமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்" என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
from Vikatan Latest news https://ift.tt/IJ8QfFz
0 Comments