கல்விக்காக வாங்கிய கடன்; திரும்ப செலுத்த முடியாத நிலை - மாமன் மகனை கடத்தி நாடகம்! - நடந்தது என்ன?

உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத்தைச் சேர்ந்தவர் அசுதோஷ் சவுகான் (25). இவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தன் தாய்மாமாவிடம் பி.சி.ஏ படிப்பதற்காக ரூ.17 லட்சம் கடன் வாங்கியிருக்கிறார். படித்து முடிந்தும் வேலை  கிடைக்காமல் திண்டாடியிருக்கிறார். இதற்கிடையில் தாய்மாமா கடனை திரும்பக் கேட்டிருக்கிறார். குடும்பச் சூழலும் சரியில்லாததால், குறுக்குவழியில் பணம்  சம்பாதிக்கத்  திட்டமிட்டிருக்கிறார்.

காவல்துறை

அதன்படி தன்னுடன் படித்து வேலையில்லாமல் இருக்கும் தன் நண்பர்கள் அர்ஜுன் தோமர், மீம்லாவைச் சேர்ந்த சூர்யா பிரதாப், கான்பூரைச் சேர்ந்த பல்லி ஆகியோருடன் சேர்ந்து தாய்மாமா மகனைக் கடத்த திட்டமிட்டிருக்கிறார். திட்டத்தின்படியே பள்ளிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த 11 வயது சிறுவன் ஷாங்கைக் காரில் கடத்தியிருக்கிறார்கள். தொடர்ந்து தாய்மாமாவிடம் பணம் கேட்டு மிரட்டியிருக்கிறார்கள். இது தொடர்பாகக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

அதைத் தொடர்ந்து, காவல்துறை செல்போன் டவர் மூலம் கடத்தப்பட்ட குழந்தையை மீட்டிருக்கின்றனர். இதில் அர்ஜுன் தோமர் மட்டும் காவல்துறையால் கைது செய்யப்பட்டிருக்கிறார். மற்ற மூவரையும் காவல்துறை தேடி வருகிறது. கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் செல்போனையும் மீட்டிருக்கும் காவல்துறை  மற்றவர்களைத்  தேடும் பணியைத் தீவிரப்படுத்தியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88



from Vikatan Latest news https://ift.tt/21mDWVH

Post a Comment

0 Comments