``திருமாவளவன் எப்போது CBI அதிகாரியாக மாறினார்?” - கேட்கிறார் பாஜக இராம.ஸ்ரீநிவாசன்

``காவிரி விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு தீர்க்க வேண்டும் என்ற கோரிக்கை இருக்கிறதே..!”

``நீர்திறப்பிலும் சரி, அணை கட்டுவதிலும் சரி காங்கிரஸ் அரசு பிடிவாதம் காட்டுகிறது. தமிழ்நாட்டில் தி.மு.க, கர்நாடகத்தில் காங்கிரஸ் இருக்கும்போது பிரதமர் மோடி குரல்கொடுக்க வேண்டுமா.. எதற்கெடுத்தாலும் வக்கணையாக பேசும் ராகுல் காந்தி குரல் கொடுக்கமாட்டாரா..?”

மோடி - ராகுல் காந்தி

``விக்கிரவாண்டியில், தி.மு.க-வுக்கு வாக்களிப்போமே தவிர பா.ஜ.க கூட்டணிக்கு வாக்களிக்க மாட்டோம் என அ.தி.மு.க ஆதவாளர்கள் முடிவெடுத்தது குறித்து?” 

``தி.மு.க ஆளும்கட்சியாக இருக்கும்போது பா.ம.க-வை ஜெயிக்க வைத்தால் எம்.எல்.ஏ-வுக்கு வாய்ஸ் இருக்காது. தொகுதிக்கு திட்டம் வராதோ என்றும் மக்கள் இம்முடிவை எடுத்திருக்கலாம். . அ.தி.மு.க வாக்குகளை பொறுத்தவரை நேரடியான நிர்வாகிகளின் வாக்குகள் பா.ம.க-வுக்கு வந்திருக்கலாம். ஆனால் அ.தி.மு.க ஆதரவு வாக்குகள் தி.மு.க-வுக்கு போயிருக்கிறது. விக்கிரவாண்டியில் நடந்தது `Buy Election' தானே.”

```Buy Election' என்கிறீர்களே தி.மு.க மட்டும்தான் பணம் கொடுத்ததா?”

``பாட்டாளி மக்கள் கட்சி, பணம் கொடுத்தார்களா எனத் தெரியவில்லை. கொடுத்திருக்க மாட்டார்கள் என நம்புகிறார்கள்”

எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை

``2026-ல் பா.ம.க கூட்டணிக்கு வரவேண்டும் என கணக்கில் அ.தி.மு.க தேர்தலை புறக்கணித்ததையெல்லாம் கவனிக்கிறதா பா.ஜ.க?”

``அதெல்லாம் கிடையாது. `டெபாசிட் கூட கிடைக்காமல் தோற்றால் கேவலம்’ என நினைத்துதான் அ.தி.மு.க போட்டியிடவில்லை”

``எடப்பாடி துரோகி’ என அண்ணாமலை பேசியதுதால்தான் அ.தி.மு.க வாக்குகள் பா.ம.க-வுக்கு வராமல் போய்விட்டதாக சொல்கிறார்களே!” 

``பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தன் கருத்தை பிரசாரத்தில் வெளிப்படுத்தினார். எடப்பாடியை விமர்சித்து பேசியதால்தான் பின்னடைவு எனச் சொல்வதை ஏற்க முடியாது. அவர் அப்படி பேசாவிட்டால் அ.தி.மு.க வாக்குகள் அப்படியே பா.ம.க-வுக்கு வந்திருக்குமா...?

``அண்ணாமலை மேற்படிப்புக்காக வெளிநாடு செல்லும்போது புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார்களா?”

``இந்த கேள்வியை பா.ஜ.க-வின் தேசிய தலைவர் நட்டாவுக்கு நான் சமர்பிக்கிறேன்”

``ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஆருத்ராவையும் பாஜக-வை தொடர்பு படுத்தும் விதமாக பேசிவருகிறாரே திருமாவளவன்?”

``திருமாவளவன் எப்போது சி.பி.ஐ போல புலனாய்வு நிறுவனமாக மாறினார் எனத் தெரியவில்லை. இருந்தாலும் குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்கள் ஆருத்ரா இல்லை யாராக இருந்தாலும் விசாரிக்கப் பட்டு குற்றவாளி அம்பலப்படட்டும்.!”

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88



from Vikatan Latest news https://ift.tt/8OupLRQ

Post a Comment

0 Comments