‘பங்குச் சந்தை: டெக்னிக்கல் அனாலிசிஸ்’ பயிற்சி வகுப்பை சென்னையில் நடத்துகிறது நாணயம் விகடன். பங்குச் சந்தை நிபுணர் ரெஜி தாமஸ் பயிற்சி அளிக்கிறார். 2024 ஆகஸ்ட் 31, சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை சென்னையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. கட்டணம் ஒருவருக்கு ரூ.6,000 ஆகும். நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்கள் சொந்தமாக லேப்டாப் அவசியம் கொண்டு வர வேண்டும்.

ரெஜி தாமஸ், 30 ஆண்டுகளுக்கும் மேலாக பங்கு முதலீடு மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறார். டெக்னிக்கல் அனாலிசிஸ் பயிற்சியாளர் ஆவார். டெக்னிக்கல் அனாலிசிஸ் மற்றும் முதலீட்டு மேலாண்மை குறித்த 750-க்கும் மேற்பட்ட கருத்தரங்குகளை நடத்தி இருக்கிறார். பல முன்னணி பல்கலைக்கழகங்களில் சிறப்பு பேராசிரியர் ஆக உள்ளார். தற்போது பீக்கான் ஆல்ஃபா (Beacon Alpha) நிறுவனத்தின் பங்குதாரராக உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கு முதலீடு, வர்த்தகத்தில் டெக்னிக்கல் அனாலிசிஸ் அறிமுகம், டெக்னிக்கல் அனாலிசிஸ் - ஷார்ட் - தேவை, வகைகள் மற்றும் விளக்கம், டெக்னிக்கல் அனாலிசிஸ் பயன்படுத்தும் பேட்டர்ன்கள் பற்றி சொல்லிக் கொடுக்கப்படும். பங்கை எந்த விலையில் வாங்க வேண்டும், எந்த விலையில் விற்க வேண்டும் என்பது உதாரணங்களுடன் விளக்கப்படும். முன்பதிவு செய்ய: https://bit.ly/4d9OA5U
from Vikatan Latest news https://ift.tt/UjFg83Z
0 Comments