விருதுநகர்: விவசாயத் தோப்பில் மின்வேலி... ஆண் யானை பலியான சோகம் - வனத்துறை விசாரணை!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேகமலை புலிகள் காப்பக வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் ராக்காச்சி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு செல்லும் வழியில், விரியன் கோயில் பீட்டில் அழகர்காட்டுக்குள் தனியாருக்கு சொந்தமான விவசாய தென்னந்தோப்பு உள்ளது. இந்த தோப்பில் வனவிலங்குகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதை தவிர்க்க, மின்வேலி அமைத்துள்ளனர். இந்தநிலையில், அடர் வனப்பகுதியிலிருந்து உணவுத்தேடி வந்த சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஆண் யானை, தனியாருக்கு சொந்தமான தென்னந்தோப்புக்குள் புகுந்துள்ளது.

பலி

அப்போது எதிர்பாராத விதமாக மின்வேலியில் யானை சிக்கி உடலில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்திருக்கிறது. இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவராஜ் தலைமையிலான வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து, கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்த யானையை உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது‌. இந்த சம்பவம் தொடர்பாக தோட்ட காவலாளி கணபதி சுந்தரநாச்சியார்புரத்தை சேர்ந்த துரைப்பாண்டி (வயது 60) பிடித்து வனத்துறையினர், பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வனப்பகுதி

விசாரணையில், 'பட்டா இடத்திற்கு சொந்தமான தனியார் நபர் உயரழுத்த மின்கம்பியிலிருந்து வயர் மூலமாக சட்டவிரோதமாக மின் இணைப்பு பெற்று மின் வேலி அமைத்திருப்பது தெரியவந்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88



from Vikatan Latest news https://ift.tt/HUStQFh

Post a Comment

0 Comments