விருதுநகர்: தேர்வில் தோல்வி அடைந்ததால் விரக்தியா? - மாணவி தற்கொலை விவகாரத்தில் வழக்குப் பதிவு

பருவத் தேர்வில் தோல்வி அடைந்ததால் மன அழுத்தத்திற்கு ஆளான மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து காவல்துறையிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "விருதுநகரைச் சேர்ந்த இப்பெண், மதுரையிலுள்ள அரசுக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த பருவத் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றுத் தோல்வியடைந்துள்ளார். அதற்கான மறுதேர்வை எழுதியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மறுதேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

மறுதேர்வு முடிவுகள்

இந்த தேர்வின் முடிவின்படி, தொடர்ந்து இரண்டாவது முறையாக மீண்டும் அதே பாடப்பிரிவில் குறைவான மதிப்பெண் பெற்று மாணவி தோல்வியடைந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கடும் மன அழுத்தத்திற்கு ஆளான அவர், வீட்டிலிருந்த தனது தாயாரிடம் குளிக்கச் செல்வதாகக் கூறிவிட்டு அறைக்கதவை உட்புறமாகத் தாழிட்டு சென்றுள்ளார். வெகுநேரமாகியும், அறைக்கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்தவர், தனது கணவருக்கு தகவல் சொல்லி வரவழைத்தார். தொடர்ந்து, அறைக்கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்ததில் , படுக்கையறை பேனில் துப்பட்டாவால் தூக்கிட்டு நிலையில் மாணவி தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது.

தற்கொலை

வழக்குப்பதிவு

இதுகுறித்த தகவல் விருதுநகர் ஊரகக் காவல் நிலையத்திற்குத் தெரியப்படுத்தப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறை மாணவியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் விருதுநகர் ஊரகக் காவல் நிலைய அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்." என்றனர்.



from Vikatan Latest news https://ift.tt/gzBUmxM

Post a Comment

0 Comments