தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள அம்மச்சியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அமுதா சரவணகுமாரி தம்பதி. இவர்களுக்கு பொறியியல் பட்டதாரியான அமுதன் என்ற மகன் உள்ளார்.
இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைச்சியாபுரமம் கிராமத்திலிருந்து அமெரிக்காவில் ஐடி துறையில் வேலை பெற்றுக்கொண்டு மனைவியுடன் அமெரிக்கா சென்றார். அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்கோ நகரில் தங்கி இருந்து பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.
இதனால் அமெரிக்கா நாட்டின் குடியுரிமை பெற்ற அவர் அமெரிக்காவில் நாட்டிலேயே கிரீன் கார்டு பெற்று நிரந்தரமாக குடியேறினார். இவருக்கு தருண்ராஜ் கிரண்ராஜ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகனான 21 வயது தருண்ராஜ் பொறியல் பட்டப்படிப்பை அமெரிக்காவில் முடித்து அங்கேயே ஐடி துறையில் சான்பிரான்சிஸ்கோ நகரில் பணிபுரிகிறார்.
இவர் சீன நாட்டைப் பூர்வீகமாக கொண்டவரும் அமெரிக்காவிலேயே சான் பிரான்சிஸ்கோ நகரில் நிரந்தரமாக கிரீன் கார்டு பெற்று குடியேறி வசித்து வரும் பீட்டர்ஜூ பிங்வூ தம்பதியின் சுனோ ஜூ என்பவரைக் காதலித்து வந்துள்ளார்.
இதை அறிந்த தருண்ராஜ் மற்றும் சுனோஜூ குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து கலந்து பேசி இருவருக்கும் திருமணம் செய்ய முடிவெடுத்து அமெரிக்காவிலேயே திருமணத்தை உறுதிப்படுத்தும் விதமாக நிச்சயத்தை முடித்தனர். மணமகன் வீட்டார் திருமணத்தை இந்தியாவில் சொந்த ஊரில் நடத்துவதற்கு விருப்பம் தெரிவித்ததை அடுத்து திருமணம் இந்துக்களின் பாரம்பரிய முறைப்படி மணமகனின் சொந்த ஊரான தேனி மாவட்டம் அமைச்சியாபுரம் கிராமம் அருகே உள்ள ஆண்டிபட்டி கானாவிலக்கு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
திருமணத்தில் மணமகனின் சமுதாய பாரம்பரிய வழக்கப்படி சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள் நடைபெற்றன. அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் ஏறி மணமகன் தருண்ராஜ் மணமகள் சுனோஜு கழுத்தில் தாலி கட்டினார்.
அப்போது திருமணத்திற்கு வந்திருந்த மணமகனின் உறவினர்கள் மற்றும் சீன நாட்டில் இருந்து வந்திருந்த மணமகளின் குடும்பத்தினர் பூக்களை தூவி வாழ்த்து தெரிவித்தனர். ஆண்டிப்பட்டி மாப்பிள்ளைக்கும் சீனப் பெண்ணுக்கும் நடந்த திருமண விழாவை தேனி மக்கள் ஆச்சரியமாக பார்த்தனர்.
from Vikatan Latest news https://ift.tt/4y1GseM
0 Comments