`தமுஎகச'-வின் கலை இலக்கிய விருதுகள்! - யார் யாருக்கு என்னென்ன விருதுகள்?

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் (தமுஎகச) 2023-ம் ஆண்டிற்கான கலை இலக்கிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

வருடந்தோறும் எழுத்தாளர்களுக்கும் கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி கெளரவித்து வருகிறது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் (தமுஎகச). தற்போது 2023-ம் ஆண்டிற்கான விருதுகளை அறிவித்திருக்கிறது.

முற்போக்கு கலை இலக்கியத்திற்கு வாழ்நாள் பங்களிப்பு செய்த ஆளுமைக்கான `கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது' எழுத்தாளர் ராஜ் கெளதமனுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. விருதுத்தொகையாக ஒரு லட்ச ரூபாய் அவருக்கு வழங்கப்படும். இதுமட்டுமின்றி, தேர்வாகியுள்ள நூலின் ஆசிரியர்களுக்கும், குறும்படம் மற்றும் ஆவணப்படத்தின் இயக்குநர்களுக்கு சான்றிதழுடன் விருது தொகை பத்தாயிரம் ரூபாயும் வழங்கப்படும்.

கலை இலக்கிய விருதுகள்

தோழர் கே.முத்தையா நினைவு விருது ப.ஜெயகிருஷ்ணன் எழுதிய `சிலப்பதிகாரமும் கண்ணகி வழிபாடும்' நூலுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. `பற்சக்கரம்' நூலை எழுதிய எஸ்.தேவிக்கு கே.பி.பாலச்சந்தர் நினைவு விருது வழங்கப்படவுள்ளது.

சு.சமுத்திரம் நினைவு விருது `ஊருக்கு ஒரு குடி' நூலை எழுதிய ஜூலியஸுக்கும்,

இரா. நாகசுந்தரம் நினைவு விருது `ஈழத் தமிழரின் புலம்பெயர் இலக்கியம்' நூலை எழுதிய இரா. செங்கொடிக்கும்,

வெம்பாக்கம் ஏ.பச்சையப்பன் – செல்லம்மாள் (ப.ஜெகந்நாதன்) நினைவு விருது `அனலிக்கா' கவிதை தொகுப்புக்காக ச.ப்ரியாவும்,

அகிலா சேதுராமன் நினைவு விருது `பசி கொண்ட இரவு' என்ற சிறுகதை தொகுப்புக்காக கி.அமுதா செல்விக்கும்,

மொழி பெயர்ப்புக்கான வ.சுப.மாணிக்கனார் நினைவு விருது பாலைச்சுனை நூலுக்கும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதை தமிழில் சுனில் லால் மஞ்சாலும்மூடு மொழிபெயர்த்திருக்கிறார்.

இராஜபாளையம் மணிமேகலை மன்றம் (கொ.மா. கோதண்டம்) விருது `இதிரா' நூலுக்காக ஜோதி விஜேந்திரனுக்கும்,

கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது `இலக்கிய மீளாய்வு' நூலை இயற்றிய தேமொழிக்கும்,

பா.இராமச்சந்திரன் நினைவு விருது `ஹோம்' என்ற குறும்படத்திற்காக மீனாட்சி சுந்தருக்கும்,

என்.பி.நல்லசிவம் - ரத்தினம் நினைவு விருது `பெரும்பாக்கம்' என்ற ஆவணப்படத்திற்காக சஞ்சய் ரித்வானுக்கும்,

அ. வெண்ணிலா

மு.சி.கருப்பையா பாரதி - ஆனந்த சரஸ்வதி நினைவு விருது பானு ராஜரெத்தினத்திற்கும்,

மக்கள் பாடகர் திருவுடையான் நினைவு விருது கிடாக்குழி மாரியம்மாளுக்கும்,

த.பரசுராமன் நினைவு விருது எம்.எஸ்.காந்தி மேரிக்கும்,

மேலாண்மை பொன்னுச்சாமி நினைவு விருது எழுத்தாளர் அ.வெண்ணிலாவுக்கும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த கலை இலக்கிய விருதுகள் விழா வருகிற டிசம்பர் மாதம் ஈரோட்டில் நடைபெறவிருக்கிறது.


from Vikatan Latest news https://ift.tt/uVjP9kC

Post a Comment

0 Comments