Heel Pain: குதிகால் வலி போக்கும் எருக்கு இலை...எப்படி பயன்படுத்துவது?

ம் மண்ணில் அனைத்து இடங்களிலும் தன்னிச்சையாக முளைத்து, அடர்ந்து காணப்படும் தாவரம் எருக்கு. மலர்களில் நீல நிற வரி காணப்படும் இனம் சாதாரண `எருக்கு’ என்றும், மலர்கள் முழுக்க வெண்மையாக இருந்தால், `வெள்ளெருக்கு’ என்றும் அழைக்கப்படும். இதனுடைய மருத்துவ குணங்களைப்பற்றி சொல்கிறார் சித்த மருத்துவர் மைக்கேல் செயராசு.

எருக்கின் இலை, பூ, பட்டை, வேர் என அனைத்திலும் மருத்துவக் குணங்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஆடு, மாடு மேய்ப்பவர்கள் காலில் முள் தைத்தால், எருக்கு இலையை உடைத்து அதன் பாலை முள் தைத்த இடத்தில் பூசிக்கொள்வார்கள். இதனால் வலி குறைவதுடன், அந்த இடம் பழுத்து, முள் வெளியே வந்துவிடும். இதை இன்றைக்கும் கிராமங்களில் பார்க்கலாம். அதனால்தான் 'ஏழைக்கு வைத்தியம் எருக்கு’ என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.

எருக்கங்செடி / Heel Pain

தென்னைநார்க்கயிறு, ட்வைய்ன் நூல், நைலான் கயிறு, இரும்பு ரோப் என கயிறுகளின் பல பரிமாணங்களை இன்றைக்குப் பயன்படுத்துகிறோம். ஆனால், ஆதிமனிதனுக்கு கயிறாகப் பயன்பட்டவை, எருக்கு நார்களும், சில கொடி வகைகளும்தான். எருக்கு நார் மிகவும் வலுவானது. வில்லின் நாண், மீன் வலை, முருக்கு நூல் என எருக்கு நாரை பலவிதமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள், பண்டைத்தமிழர்கள். இலவம்பஞ்சு தலையணை கிடைக்காதவர்களுக்கு, எருக்குக் காயிலுள்ள பஞ்சுதான் தலையணையாக இருந்திருக்கிறது.

‘கேல்கனியல் ஸ்பர்’ (Calcaneal Spur) என்று ஆங்கில மருத்துவத்தில் கூறப்படும் குதிகால் வாதத்துக்கு எருக்கு இலை சிறந்த நிவாரணி. செங்கல்லை அடுப்பில் போட்டு, நன்றாகச் சூடேறியவுடன் அதை எடுத்து, அதன்மீது ஐந்து எருக்கிலைகளை வைக்க வேண்டும். குதிகால் வலியுள்ளவர்களை, வலியுள்ள பாகத்தைச் செங்கல்லின் மீது தாங்கக்கூடிய வரையில் வைத்து அழுத்தும்படிச் செய்ய வேண்டும். அந்தச் செங்கல் சூடு ஆறினாலும், மற்றொரு செங்கல்லை முன்புபோல் சூடேற்றி எருக்கிலையை வைத்து முன்பு போலவே செய்ய வேண்டும். இப்படி தினமும் காலை, மாலை மூன்று நாள்கள் செய்து வந்தால் வலி நீங்கிவிடும். குதிகால் (குதிங்கால்) வாதத்துக்கு இது நல்ல குணத்தைக் கொடுக்கும்.

மைக்கேல் ஜெயராசு

எருக்கிலைகளை நிறைய சேகரித்து வெற்றிலைக் கட்டுபோலக் கட்டிக்கொண்டு, கத்தியால் நடுப்பகுதியில் அறுத்துக்கொள்ள வேண்டும். அறுபட்ட பாகத்தைச் சூடாக்கிய வேப்பெண்ணெயில் தோய்த்து, பொறுக்கும் சூட்டில் ஒற்றடம் கொடுக்க வாதவலி, வீக்கங்கள் குணமாகும். வலிப்பு வந்தவர்களுக்கு உள்ளங்கைகளில் பூசிவந்தால் உடலில் சூடு உண்டாகி, உடல்வலி, சோர்வு, அசதி நீங்கும். எருக்கிலைகளை நன்றாக உலரவைத்து, பொடி செய்து, தேங்காய் எண்ணெயில் குழப்பிப் போட்டுவர புழுவைத்த புண்கள் ஆறும்.



from Vikatan Latest news https://ift.tt/ZkcDzaR

Post a Comment

0 Comments