சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் `அமரன்' திரைப்படம் தீபாவளி வெளியீடாக அக்டோபர் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை சாய் ராம் கல்லூரியில் நடைபெற்றது. இயக்குநர் மணிரத்னம், லோகேஷ் கனகராஜ் உட்பட படக்குழுவினர் பலரும் இந்த விழாவில் கலந்துக் கொண்டனர்.
இந்த நிகழ்வில் பேசிய சிவகார்த்திகேயன், "நான் விழும்போது கைதந்து , எழும்போது கைதட்டி எப்போதும் என்கூடவே இருக்கிற என் ப்ரதர்ஸ் & சிஸ்டர்ஸ். முகுந்த் சாரை பற்றி செய்தியில் பார்த்துதான் தெரிஞ்சுகிட்டேன். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இந்த படத்தோட கதையை சொன்னதும் என்னை அது பாதிச்சது. இந்த படம் அவருடைய பயணத்தை பற்றியது. அவர் ஒரு நல்ல தலைவர். இந்த படத்தோட இன்டர்வெல் காட்சி காஷ்மீர்ல இரவு நேரத்துல ஷூட் பண்ணினோம்.
இயக்குநர் ஆக்ஷன்னு சொல்றதுக்கு முன்னடியே கட் சொல்லி `இப்போவே சுடாதீங்க அக்ஷன் சொன்னதும் சுடுங்க'னு சொன்னாங்க. நான் ` நான் சுடல. கை நடுங்குது'னு சொன்னேன். ராஜ்குமார் பெரியசாமி பிக் பாஸ் நிகழ்ச்சியோட இயக்குநராக இருந்திருக்காரு . பிக் பாஸ் மாதிரியே என்னையும் 100 நாள் காஷ்மீர் கூடிட்டு போனாரு. நானும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷும் கூடிய விரைவில இன்னொரு படத்துக்கு இணைவோம். நான் சாய் பல்லவியை ப்ரேமம் படத்துலதான் பார்த்தேன். மலர் டீச்சர் கதாபாத்திரத்தை தியேட்டரே அப்போ கொண்டாடுச்சு. அதுக்குப் பிறகு அவங்க நம்பர் வாங்கி அவங்களோட நடிப்பை பத்தி பேசினேன். அதுக்கு அவங்க `நன்றி அண்ணா'னு சொன்னாங்க. அப்போது அவங்கிட்ட ஒரு நாள் நம்ம சேர்ந்து நடிப்போம்னு சொன்னேன். ரொம்ப நாள் கழிச்சு அது நடந்திருக்கு.
கமல் சாருடைய `ராஜ்கமல் பிலிம்ஸ்' நிறுவனத்துல இருந்து பல கல்ட் கிளாசிக் திரைப்படங்கள் வந்திருக்கு. நான் கமல் சாரை ஒரு இசை வெளியீட்டு விழாவுல சந்திச்சப்போ அவரை ரஜினி சார் குரல்ல மேடைக்கு கூப்பிட்டேன். அப்போ ` நான் அவசர அவசரமாக விமானம்லாம் பிடிச்சு நிகழ்வுக்கு வந்தேன். வரலைனாகூட இவர் என்னை மாதிரியே பேசியிருப்பாரு போல'னு கமல் சார் சொன்னாரு. கமல் சார் படம் பார்த்துட்டு நல்லா இருக்குனு சொல்லியிருக்காங்க. இதுமட்டுமில்ல, கொட்டுக்காளி படத்தை பார்த்துட்டு மூன்று பக்கங்கள் விமர்சனம் எழுதி பாராட்டியிருந்தாங்க. கமல் சாருக்கு நான் ரஜினி சாருடைய ரசிகன்னு தெரியும். ஆனா அதையெல்லாம் மனசுல வச்சுக்காமல் என்னை பாராட்டியிருக்கார். அதுனாலதான் அவர் இந்த இடத்துல இருக்காரு.
ரஜினி சாரும் முதல் நாளே படம் பார்த்திடுவாரு. கமல் சாருக்கும் ரஜினி சாருக்கும் இடையே அப்படியான பந்தம்தான் இருக்கு. அவங்க உண்மையாகவே அபூர்வ சகோதரர்கள்தான். இரண்டு வருஷத்துக்கு முன்னாடி ப்ரின்ஸ் படம் வெளியாச்சு. அதுக்கு எதிர்மறையான விமர்சனங்கள்தான் வந்துச்சு. நான் அப்போ இன்னும் பெட்டரான கதையை தேர்ந்தெடுத்திருக்கணும்னு நினைச்சேன். `இவன் இதோட அவுட்'னு பலர் பேசினாங்க. அப்போ அஜித் சாரை சந்திச்சேன். அவர் ` வெல்கம் டு பிக் லீக்'னு சொன்னார்.
நம்ம வாழ்க்கைல பிரச்னைங்கிறது சென்னை மழை மாதிரி. எல்லாத்துக்கும் தயாராக இருக்கும்போது வராது. ஜாலியாக இருக்கும்போது ஒரு காட்டு காட்டிடும். அந்த சமயத்தில எதிர்நீச்சல் போட்டுதான் வரணும். எப்போதும் சந்தோஷமாக இருங்க. இது உங்களுடைய வாழ்க்கை."என்றார்.
இதனை தொடர்ந்து தொகுப்பாளர், "தளபதி உங்க கையில துப்பாக்கியையும், வாட்ச்சையும் கொடுத்திருக்கார். எது பிடிச்சிருந்தது?" எனக் கேள்வி எழுப்பினார். இதற்கு சிவகார்த்திகேயன், " தளபதி கொடுத்த அன்பு பிடிச்சிருந்தது!" என பதிலளித்தார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
from Vikatan Latest news https://ift.tt/ydLxYoS
0 Comments