Shruthi: வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தையும், நிச்சயமான வரனை விபத்திலும் இழந்த ஸ்ருதிக்கு அரசு வேலை

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு நாட்டையே உலுக்கியது. அதில் இளம் பெண் ஸ்ருதி-யின்  மொத்த குடும்பமும் மண்ணில் புதைந்த சோகம் அரங்கேறியது. வெள்ளார்மல அரசு பள்ளி மொத்தமாக மண்ணில் புதைந்த நிலையில், அந்த பள்ளிக்கு அருகே வசித்துவந்த சிவண்ணனின் 9 பேர் கொண்ட குடும்பத்தில் மூத்த மகள் ஸ்ருதி-யை தவிர மற்ற அனைவரும் மண்ணில் புதைந்து இறந்தனர். சிவண்ணன், அவரது மனைவி சபிதா, தந்தை போமலப்பன், தாய் சாவித்திரி, மகள்கள் ஸ்ருதி, ஸ்ரேயா(19) ஆகியோர் ஒரு வீட்டில் வசித்துவந்தனர்.

பக்கத்துவீட்டில் சிவண்ணனின் சகோதரர், அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோரும் வசித்துவந்தனர். 9 பேர் கொண்ட அவர்களது குடும்பத்தில் கோழிக்கோடு மிம்ஸ் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த ஸ்ருதி மட்டுமே உயிருடன் உள்ளார். ஸ்ருதிக்கு வரும் டிசம்பர் மாதம் திருமணம் நடத்துவதற்காக நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் ஸ்ருதியின் குடும்பத்தினர் அனைவரும் நிலச்சரிவில் சிக்கி மரணமடைந்தனர்.

தனியாக நின்ற ஸ்ருதிக்கு ஒரே நம்பிக்கையாக இருந்தது அவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட ஜென்சன் மட்டுமே. குடும்பத்தினரும், வீடும், திருமணத்துக்காக வீட்டில் சேர்த்து வைத்த நகை, பணம் ஆகியவை நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டது. ஆனாலும் நிச்சயித்தபடி ஸ்ருதியை திருமணம் செய்துகொள்ள தயாராக இருந்தார் ஜென்சன்.

கேரள முதல்வர் பினராயி விஜயன்

இதற்கிடையே கடந்த மாதம் ஜென்சனும், ஸ்ருதியும் காரில் பயணித்துக்கொண்டிருந்த சமயத்தில் தனியார் பேருந்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஜென்சன் மரணமடைந்தார். ஸ்ருதி காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். ஸ்ருதியின் நிலையை எண்ணி கேரள மாநிலமே கண்ணீர் வடித்தது.

இந்த நிலையில் ஸ்ருதிக்கு அரசு வேலை வழங்குவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பினராயி விஜயன், "வயநாடு நிலச்சரிவில் தாய், தந்தை இருவரையும் இழந்த 6 குழந்தைகளுக்கு தலா 10 லட்சம் வீதம் நிதி வழங்குவது எனவும், பெற்றோரில் ஒருவரை இழந்த 8 குழந்தக்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வீதமும் வழங்க அமைச்சரவையில் முடிவு செய்யப்புட்டுள்ளது. வயநாட்டில் வீடும், நிலமும் இழந்தவர்களை மறு குடியமர்த்த இடம் தேடும் பணி நடந்துகொண்டிருக்கிறது.

வயநாட்டில் மேப்பாடி பஞ்சாயத்தில் நெடும்பாலா எஸ்டேட், கல்பற்றா நகராட்சியில் எல் ஸ்டோன் எஸ்டேட் ஆகிய இடங்களில் டவுன்ஷிப் கட்டமைக்க ஆலோசித்து வருகிறோம். அதத்கான சட்ட பிரச்னைகள் குறித்து ஆய்வுசெய்து வருகிறோம். பேரிடர் சட்டம் 2005-ன் படி இடத்தை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. அதன்மூலம் விரைந்து இடத்தை அரசு கையகப்படுத்த முடியும். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் மக்கள் வசிக்க முடியாத அளவுக்கு உள்ள இடங்களில் உள்ளவர்களை வேறு இடத்தில் குடியமர்த்த 2-ம் கட்ட திட்டமும் தீட்டப்பட்டுள்ளது.

ஜென்சன், ஸ்ருதி

வயநாடு நிலச்சரிவில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் இழந்துள்ளார் இளம்பெண் ஸ்ருதி. அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் வருங்கால கணவரும் விபத்தில் மரணமடைந்துவிட்டார். எனவே ஸ்ருதிக்கு அரசு வேலை வழங்க அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

ஸ்ருதி

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ருதி, "அரசு வேலை வங்குவதாக அறிவித்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. வயநாட்டில் வேலை வழங்கினால் நன்றாக இருக்கும் என விரும்புகிறேன். விபத்தில் காயம் ஏற்பட்டதால் எனது காலில் ஒரு ஆபரேஷன் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். 15 நாட்களுக்குப் பின்னர் ஆப்பரேஷன் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளனர். காலில் வலி இப்போதும் உள்ளது" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from Vikatan Latest news https://ift.tt/8Mg7RSm

Post a Comment

0 Comments