காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் தொடர்ச்சியாக, மத்திய அரசை வலியுறுத்தி வரும் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று சாதிவாரி கணக்கெடுப்பு (Caste Census). நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் இதனை வாக்குறுதியாகவே அறிவித்தது. தற்போது, நடந்துகொண்டிருக்கும் ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலிலும், ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம் எனக் காங்கிரஸ் உறுதியளித்திருக்கிறது.
இந்த நிலையில், யு.பி.ஏ ஆட்சியின்போது அதைச் செயல்படுத்தாதது தவறென்று நினைப்பதாகவும், காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்றால் அதைச் செயல்படுத்துவோம் எனவும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஜார்க்கண்டில் தெரிவித்திருக்கிறார்.
மாநில தலைநகர் ராஞ்சியில் பேசுகையில் இதனைத் தெரிவித்த ராகுல் காந்தி, ``ஐக்கிய முற்போக்கு கூட்டணியும் (UPA), காங்கிரஸும் சாதிவாரி யோசனையை முன்வைத்தது. அப்போதே அதை நடைமுறைப்படுத்தாதது தவறு என்று கருதுகிறேன். இரண்டு தென் மாநிலங்களில் காங்கிரஸ், பல தரப்பினரைச் சந்தித்து பொது விவாதம் மூலம் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த கேள்விகளுக்குத் தயாராகி வருகிறது. காங்கிரஸ் இதில் மிகத் தெளிவான பார்வை கொண்டிருக்கிறது.
துல்லியமான தரவு கிடைத்ததும், அனைத்து பிரிவினருக்கும் நீதியை உறுதிப்படுத்தும் கொள்கைகளை நாம் உருவாக்க முடியும். லோக்சபாவில் நான் உறுதியளித்ததைப் போல, ஜார்க்கண்டில் நாங்கள் செய்வோம். சாதிவாரி கணக்கெடுப்பை நாங்கள் செயல்படுத்தும்போது, இது இந்த நாட்டின் மாற்றம் மற்றும் வளர்ச்சியில் ஒரு பெரிய படியாக அது இருக்கும் என்று உங்களுக்கு உறுதியளிக்கிறேன். மேலும், பா.ஜ.க இதைச் செயல்படுத்த விரும்பினாலும், எப்படிச் செய்வதென்று அவர்களுக்குத் தெரியாது." என்று கூறினார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...
https://bit.ly/MaperumSabaithanil
from Vikatan Latest news https://ift.tt/ytvjiMg
0 Comments