நம் தலைநகர் டெல்லியில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ஆட்டோ எக்ஸ்போ தெரியும்தானே! அதைப்போன்று இத்தாலியில் EICMA (Esposizione Internazionale Ciclo Motociclo e Accessori) என்றொரு ஆட்டோ ஷோ நேற்றிலிருந்து நடந்து கொண்டிருக்கிறது. இதில் நம் ஊர் நிறுவனங்கள் பல தங்களுடைய வாகனங்களை ரிவீல், லாஞ்ச் செய்து கலக்கி வருகிறார்கள்.
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்தான் இந்த EICMA ஷோவின் ஹைலைட்டாக இருக்கலாம். நான் சொல்வது டூவீலர் எலெக்ட்ரிக் செக்மென்ட்டில். ஆக்டிவாவை எலெக்ட்ரிக்கில் பார்ப்பது பரவசம்தானே! அதுவும் இரட்டை டிட்டாச்டு வசதி கொண்ட பேட்டரி பேக்கில் ஆக்டிவா வந்தால் யாருக்குமே ஆச்சரியமும் பரவசமும் சேர்ந்து கொள்ளும்தானே!
110 சிசி மற்றும் 125 சிசி ஸ்கூட்டர் என்ன பெர்ஃபாமன்ஸ் தருமோ, அதே அளவு பெர்ஃபாமன்ஸை இதில் எதிர்பார்க்கலாம். அதேநேரம் இதன் பேட்டரி பேக், சிங்கிள் சார்ஜுக்கு 100 கிமீ தரும் என்கிறது ஹோண்டா. ரியல் டைமில் 90 தந்தால் நலம்! லேட்டஸ்ட் வசதிகளான புளூடூத் மற்றும் நேவிகேஷன் போன்ற வசதிகளும் இந்த ஆக்டிவாவில் உண்டு.
இந்த ஆக்டிவா, ஐரோப்பிய மார்க்கெட்டில் ஹோண்டாவின் இரண்டாவது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர். EM1 e என்றொரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஜப்பானில் விற்றுக் கொண்டிருக்கிறது ஹோண்டா. அதன் பிறகு இந்த ஆக்டிவா வந்தால், இரண்டாவது ஸ்கூட்டர். ஆனால், நம் இந்தியாவுக்கு ஹோண்டாவின் முதல் பிறப்பு இதுதான்.
இந்த எலெக்ட்ரிக் ஆக்டிவாவை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். இதன் டிசைன் இந்த மில்லினியல் காலத்துக்கு ஏற்றபடி கண்ணைக் கவரும்படிதான் இருக்கிறது. ஹெட்லைட் அந்த ஆப்ரானில் ஸ்கூட்டர் முழுவதும் வியாபித்திருப்பது அழகு. வழக்கம்போல், ஹேண்டில்பார் டூம் பகுதியில் கறுப்பு நிற கிளாஸி ஸ்டைல் ஃபினிஷ் செம ஸ்டைலாக இருக்கிறது. முன் பக்கம் டிஸ்க் பிரேக் இருக்கிறது. டச் ஸ்க்ரீன் இப்போதைய ஸ்கூட்டர்களுக்கு டஃப் கொடுப்பதுபோல் இருக்கிறது. நம்ம ஊருக்கு வரும்போது எப்படி இருக்குனு பார்க்கலாம்! கொஞ்சம் அடுத்த வருஷம் வரை பொறுத்திருங்க!
ஹலோ, யமஹா எல்லாம் என்னப்பா பண்றீங்க?
from Vikatan Latest news https://ift.tt/KdNm0ki
0 Comments