SAvIND: `மைதானத்தை சூழ்ந்த பூச்சிகள்'- விநோத காரணத்தால் தடைபட்ட இந்தியா - தென்னாப்பிரிக்கா போட்டி

தென்னாப்பிரிக்காவின் செஞ்சுரியனில் நடந்து வரும் மூன்றாவது டி20 போட்டியில் திடீரென பூச்சிகளின் தொல்லை அதிகரித்ததால் போட்டி இடையிலேயே கொஞ்ச நேரம் நிறுத்தப்பட்டிருக்கிறது.
SA v Ind

இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. முதல் போட்டியை இந்தியா வென்ற நிலையில் இரண்டாம் போட்டியை தென்னாப்பிரிக்கா வென்றிருந்தது. 1-1 என தொடர் சமநிலையில் இருக்கும் நிலையில் மூன்றாவது போட்டி இன்று செஞ்சுரியனில் நடந்து வருகிறது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 219 ரன்களை அடித்திருந்தது. திலக் வர்மா சதமடித்திருந்தது. தென்னாப்பிரிக்கா 220 ரன்களை நோக்கி சேஸிங்கைத் தொடங்கியது. அர்ஷ்தீப் சிங் முதல் ஓவரை வீசி முடிக்க இரண்டாவது ஓவரை ஹர்திக் பாண்ட்யா வீசத் தயாரானார். ஆனால், அதற்குள்ளாகவே ஒளி விளக்குகளை வட்டமிடும் ஈசலை போன்ற பூச்சிகள் மைதானம் முழுவதையும் மொய்க்க தொடங்கின.

அதிகப்படியான பூச்சிகள் மைதானத்தை வட்டமிட்டதால் வீரர்களுக்கு தொந்தரவு ஏற்பட்டது. பூச்சிகள் கொடுத்த தொந்தரவால் போட்டியை தற்காலிமாக நிறுத்த நடுவர் முடிவெடுத்தார். இதனால் இரு அணியின் வீரர்களும் பெவிலியனுக்கு திரும்பினர். இரு அணி வீரர்களும் 15 நிமிடங்களுக்கு மேல் காத்திருந்த நிலையில் பூச்சிகளின் தொல்லை குறைந்தவுடன் போட்டி மீண்டும் தொடங்கப்பட்டது.

SA v Ind

வழக்கமாக மழை பெய்தால் மட்டுமே போட்டிகள் இப்படியாக தற்காலிமாக நிறுத்தப்படும். மழையையும் கடந்து பனிமூட்டம், போதிய வெளிச்சமின்மை போன்ற காரணங்களுக்காகவும் அரிதாக போட்டிகள் நிறுத்தப்பட்டிருக்கிறது. தேனீக்களின் தொல்லையால் நிறுத்தப்பட்ட போட்டிகளும் இருக்கவே செய்கிறது.



from Vikatan Latest news https://ift.tt/EgboTHJ

Post a Comment

0 Comments