இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்துறை ஜாம்பவானான இன்ஃபோசிஸ் நிறுவனம், அதன் மைசூர் அலுவலகத்தில் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டதால், அங்கு பணியாற்றும் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலைப் பார்க்க அறிவுறுத்தியிருக்கிறது.
நேற்று காலை (31.12.2024) சிறுத்தை குறித்த செய்தி வந்த உடனேயே வனத்துறையினர் வளாகம் முழுவதும் தேடுதலை தொடங்கியுள்ளனர். சிறுத்தையை பிடிப்பதற்கான திட்டம் முடுக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளின் அறிவுறுத்தலின் அப்டிப்படையில் ஊழியர்களை வீட்டிலிருந்து பணியாற்ற வைக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Infosys அலுவலக வளாகத்திலுள்ள ஒரு சுரங்க-வாகன நிறுத்துமிடத்தில் சிறுத்தை இருந்ததை அங்கிருந்த காவலாளி பார்த்துள்ளார். சிசிடிவி காட்சிகள் மூலம் சிறுத்தையின் நடமாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் HR பிரிவு எந்த ஊழியர்களும் அலுவலக வளாகத்துக்குள் நுழையவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
வன விலங்குகளை கையாளும் வல்லுநர்கள் உள்பட 50 வனத்துறைய அதிகாரிகள் இந்த சிறுத்தையை பிடிக்கும் திட்டத்துக்காக இன்ஃபோசிஸ் வளாகத்தில் குவிந்துள்ளனர். சிறுத்தையை பிடிப்பதற்காக வலைகளும் கூண்டுகளும் கொண்டுவந்து, ட்ரோன் கேமராக்கள், தெர்மல் ட்ரோன் கேமராக்களை பயன்படுத்தி சிறுத்தையை தேடிவருகின்றனர்.
ஊழியர்கள் மட்டுமல்லாமல் இன்ஃபோசிஸின் உலகளாவிய கல்வி மையத்தில் தங்கியிருக்கும் 4000 மாணவர்களும் அறைக்கு உள்ளேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மைசூரு இன்ஃபோசிஸ் அலுவலகம் ரிசர்வ் ஃபாரஸ்ட் ஏரியாவில் அமைந்துள்ளதால், சிறுத்தை நுழைந்துள்ளது. இதற்கு முன்னர் 2011ம் ஆண்டும் இதேப்போல அலுவலக வளாகத்துக்குள் சிறுத்தை நுழைந்தது குறிப்பிடத்தக்கது.
from Vikatan Latest news https://ift.tt/vLc4faU
0 Comments