அகாடமி விருதுகள் என்று அழைக்கப்படும் ஆஸ்கர் விருதுகள் இந்திய நேரப்படி இன்று அதிகாலை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள டால்பி தியேட்டர் அரங்கில் கோலகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த ஆஸ்கர் விருதுக்கான நாமினேஷன் பட்டியலில் 13 பிரிவுகளில் நாமினேட் செய்யப்பட்டு பலரது கவனத்தையும் பெற்றிருந்தது ஸ்பானிஷ் திரைப்படமான எமிலியா பெரெஸ் (EMILIA PEREZ). இத்திரைப்படம் ஆங்கில மொழி அல்லாத திரைப்படங்களில் அதிகமாக நாமினேட் செய்யப்பட்ட திரைப்படம் என்ற புதிய சாதனை படைத்துள்ளது. இத்திரைப்படத்தில் நடித்த கார்லா சோஃபியா காஸ்கான்தான் (KARLA SOFIA GASCON) ஆஸ்கர் விருது பட்டியலுக்கு தேர்வாகும் முதல் திருநங்கை என்பது கூடுதல் சிறப்பு.
இதை தாண்டி புரூட்டலிஸ்ட் (THE BRUTALIST) என்ற ஆங்கிலத் திரைப்படம் 11 பிரிவுகளில் நாமினேட் செய்யப்பட்டுள்ளது. விக்கட் (WICKED) என்ற திரைப்படமும் 10 பிரிவுகளில் நாமினேட் செய்யப்பட்டுள்ளது. கான்கிளேவ் (CONCLAVE) மற்றும் எ கம்பிளிட் அன்னோன்(A COMPLETE UNKNOWN ) திரைப்படங்கள் 9 பிரிவுகளில் நாமினேட் செய்யப்பட்டிருக்கிறது.

எமிலியா பெரெஸ், விக்கட் , டியூன் இரண்டாம் பாகம், தி புரூட்டலிஸ்ட் திரைப்படங்களெல்லாம் சிறந்த திரைப்படம், இயக்கம், நடிகர், நடிகை பிரிவுகளில் தேர்வாகி இருப்பதால் இத்திரைப்படங்கள் இடையே கடும் போட்டி நிகழும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தியா சார்பில் பிரியங்கா சோப்ரா (PRIYANKA CHOPRA) மற்றும் குனீத் மோங்கா (GUNEET MONGA) தயாரித்த `அனுஜா' என்ற குறும்படம் மட்டும் `சிறந்த குறும்படம் (லைவ் ஆக்ஷன்)' பிரிவில் தேர்வாகியிருந்தது.
இந்நிலையில் இந்த 97வது ஆஸ்கர் விருது விழாவில் என்னனென்ன திரைப்படங்கள் விருதினை வென்றுள்ளன என்பதைப் பற்றிப் பார்ப்போம். இதுவரை அறிவிக்கப்பட்ட விருதாளர்களின் பட்டியல் இதோ!
சிறந்த திரைப்படம் - Yet to Announce
சிறந்த இயக்குநர் - Yet to Announce
சிறந்த நடிகை - Yet to Announce
சிறந்த நடிகர் - Yet to Announce
சிறந்த திரைக்கதை - Sean Baker (ANORA)
சிறந்த ஒளிப்பதிவு - Yet to Announce
சிறந்த படத்தொகுப்பு - Yet to Announce
சிறந்த துணை நடிகை - Yet to Announce
சிறந்த துணை நடிகர் - KIERAN CULKIN (Movie - A Real Pain)
சிறந்த பாடல் - Yet to Announce
சிறந்த பிண்ணனி இசை - Yet to Announce
சிறந்த ஆவணப்படம் - Yet to Announce
சிறந்த ஆவணக் குறும்படம் - Yet to Announce
Best International Feature Film - Yet to Announce
Best Animated Feature Film - Movie - FLOW
Best Animated Short Film - IN THE SHADOW OF THE CYPRESS
Best Production Design - Yet to Announce
Best Sound - Yet to Announce
Best Visual Effects - Yet to Announce
Best Adapted Screenplay - Peter Straughan (Movie - CONCLAVE)
Best Live Action Short Film - Yet to Announce
Best Makeup and Hairstyling - Movie - THE SUBSTANCE (Pierre-Olivier Persin, Stéphanie Guillon and Marilyne Scarselli)
Best Costume Design - Paul Tazewell (Movie - WICKED)
from Vikatan Latest news https://ift.tt/oUw4IZx
0 Comments