WPL 2025: இறுதிவரைப் போராடிய டெல்லி கேபிடல்ஸ் வீராங்கனைகள்... மீண்டும் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ்!

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இந்த இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கியது மும்பை அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்தது.

WPL - DCW vs MIW
WPL - DCW vs MIW

மும்பை அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 44 பந்தில் 66 ரன் களும், நாட் ஸ்கைவர் ப்ரண்ட் 30 ரங்களும் குவித்தனர். அதைத்தொடர்ந்து, 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 8 ஓவர்களில் 44 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியது. பின்னர், ஜெமிமா ரோட்ரிக்ஸின் 30 ரன்கள் மற்றும் மரிசான் காப்பின் 40 ரன்கள் பங்களிப்புடன் வெற்றிக்கு போராடிய டெல்லி அணி, இறுதியில் 20 ஓவர்களுக்கு 9 விக்கெட் 141 ரன்கள் எடுத்து வெறும் 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இதன்மூலம், டெல்லி அணி தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக இறுதிப்போட்டியில் தோல்வியுற, மறுபக்கம் இரண்டாவது முறையாக மும்பை சாம்பியன் பட்டம் வென்றது. மும்பை அணியின் கேப்டன் கவுர் ஆட்டநாயகி விருதுபெற, அதே அணியைச் சேர்ந்த நாட் ஸ்கைவர் ப்ரண்ட் தொடர்நாயகி விருது வென்றார்.



from Vikatan Latest news https://ift.tt/LlF0OPz

Post a Comment

0 Comments