'சென்னை தோல்வி!'
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி முலான்பூரில் நடந்திருந்தது. கடைசி வரை பரபரப்பாகச் சென்ற இந்தப் போட்டியை சென்னை அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருக்கிறது.

தோல்விக்குப் பிறகு சென்னை அணியின் கேப்டன் ருத்துராஜ் சில முக்கிய விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.
'ருத்துராஜ் சொல்லும் காரணம்!'
அவர் பேசியதாவது, 'கடந்த 4 போட்டிகளிலுமே நாங்கள் ட்ராப் செய்த கேட்ச்கள்தான் வெற்றிக்கும் தோல்விக்குமான வித்தியாசமாக இருந்தது. நாங்கள் எந்த பேட்டருக்கு கேட்ச்சை விடுகிறோமோ அவர் கூடுதலாக 20-30 ரன்களை அடித்துவிடுகிறார். அது தோல்விக்கு காரணமாகிவிடுகிறது. பீல்டிங்கை பதற்றத்தோடு செய்யாமல் அனுபவித்து மகிழ்ந்து செய்யவேண்டும்

லீக் ஆகும் ரன்களை தடுத்து ரன் அவுட்களை உருவாக்குவதுதான் அணிக்கு உதவும். பிரியான்ஷ் பயமில்லாமல் ரிஸ்க் எடுத்து நன்றாக ஆடினார். அவர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தாலும் மொமண்டத்தை விடாமல் அப்படியே எடுத்துச் சென்றனர். கான்வேயும் ரச்சினும் வேகப்பந்து வீச்சாளர்களை சிறப்பாக ஆடக்கூடியவர்கள்.
இன்றும் டாப் ஆர்டரில் சிறப்பாக ஆடினார்கள். கான்வே பந்தை டைம் செய்து ஆடக்கூடியவர். அவர் டாப் ஆர்டருக்கு பொருந்துவார். ஜடேஜா அதற்கு நேர்மாறான ரோலை செய்யக்கூடியவர். அதனால்தான் கான்வேயை ரிட்டையர் அவுட் ஆக வைத்தோம். நன்றாக யோசித்து நேரமெடுத்து சில ஓவர்கள் பார்த்த பிறகே அவர் சிரமப்பட்டதால்தான் அந்த முடிவுக்கு வந்தோம்.' என்றார்.
from Vikatan Latest news https://ift.tt/iuKJZUS
0 Comments