Retro Audio Launch: "இந்தப் படத்தில் 12 பாடல்கள்" - சந்தோஷ் நாராயணன் பேச்சு

சூர்யா மற்றும் பூஜா ஹெக்டே இணைந்து நடித்துள்ள ரெட்ரோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஏற்கெனவே கண்ணாடிப்பூவே, கனிமா போன்ற பாடல்கள் ஹிட் ஆகியிருக்கின்றன.

இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட சந்தோஷ் நாராயணன், கண்ணாடிப் பூவே பாடலைப் பாடி விழாவை அலங்கரித்தார்.

Kanima - Retro movie song
Kanima - Retro movie song

Santhosh Narayanan பேச்சு!

தொடர்ந்து பேசிய அவர், " பீட்சா பட சமயத்துல கார்த்திக் என்னை மீட் பண்ணினார். எனக்குள்ள இருந்த ஒரு பைத்தியக்காரனை வெளிய கொண்டு வந்திருக்கார் அவர்.

நாங்க வீட்ல எல்லா பாட்டையும் பீல் பண்ணிதான் வேலை பார்த்தோம். கார்த்திக் சுப்புராஜ் படத்தோட அப்பாவுக்கு 100வது படம். என்னுடைய அம்மாவும் இந்த படத்துல ஒரு பாடல் பாடியிருக்காங்க.

இந்த படத்துல மொத்தம் 12 பாடல்கள். சைட் ஏ-ல மொத்தம் 6 பாடல்கள். அதெல்லாம் இன்னைக்கு வெளியாகியிருக்கு. சைட் பி-ல மொத்தம் 6 பாடல்கள், அதெல்லாம் இனி வெளியாகும்.

சூர்யா சார், அகரம் அறக்கட்டளையை தொடங்குவது எளிதான விஷயம். ஆனால் அதை தொடர்ந்து நடத்துவது கஷ்டமான விஷயம்." எனப் பேசினார்.

அத்துடன் அவரது குழுவினரை மேடைக்கு அழைத்துப் பாராட்டினார். தொடர்ந்து ரெட்ரோ படத்தின் பாடல்களை மேடையில் பெர்ஃபாம் செய்தார் சந்தோஷ் நாராயணன்.

Retro

2டி என்டெர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்தத் திரைப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹஃபீக் முகமது அலி படத்தொகுப்பில் பணியாற்றியுள்ளார்.

ரெட்ரோ படத்தின் பாடல்கள் ஏற்கெனவே ஹிட் ஆகியிருக்கும் நிலையில், கார்த்திக் சுப்புராஜ் - சூர்யா இணைக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.



from Vikatan Latest news https://ift.tt/P8kMy73

Post a Comment

0 Comments