வெள்ளிதான் அடுத்த தங்கமா? 2025-ல் முதலீடு செய்வது எப்படி? - விகடன் லாபம் நடத்தும் இலவச வெபினார்

வெள்ளிதான் அடுத்த தங்கமா? 2025-ல் முதலீடு செய்வது எப்படி?

கடந்த ஓராண்டாக தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு படு லாபம். ஆனால் இந்தக் கட்டுரை தங்கம் பற்றியதல்ல. வெள்ளை உலோகமான வெள்ளி பற்றியது. கடந்த சில வாரங்களில் முதல்முறையாக ஒரு அவுன்ஸ் தங்கம், சர்வதேச அளவில் 35 அமெரிக்க டாலர் எனும் உச்சத்தைத் தொட்டுள்ளது. நிபுணர்களைப் பொறுத்தவரை, வெள்ளி புலிப்பாய்ச்சலுக்கு காத்திருப்பதாக கூறுகிறார்கள். ஏன் எப்போதும் இல்லாமல் தற்போது வெள்ளிக்கு இவ்வளவு மவுசு? நீங்கள் எப்படி இந்த வாய்ப்பை பயன்படுத்தி லாபம் பார்க்கலாம்? தெரிந்துகொள்ள கட்டுரையை முழுமையாக படிக்கவும்

வெள்ளி - Silver
வெள்ளி - Silver

வெள்ளியின் கையிருப்பு குறைந்து வருகிறது!

COMEX - Chicago Mercantile Exchange (CME) Group என்பது தங்கம், வெள்ளி, செம்பு உள்ளிட்ட உலோகங்களின் மீது முதலீடு செய்ய உதவும் சந்தையாகும். இந்த அமைப்பின் வெள்ளி கையிருப்பு 2024-க்கு பிறகு எப்போதையும் விட 50% ஆக குறைந்துள்ளது. தற்போது 330 லட்சம் அவுன்ஸ் வெள்ளியே கஜானாவில் உள்ளது. இது தற்காலிகமான குறைபாடல்ல, உலகளாவிய அளவில் அதிகரித்து வரும் வெள்ளியின் தேவையின் பிரதிபலிப்பு என்கின்றனர் நிபுணர்கள். அதேபோல, தலா ஒரு அவுன்ஸ் உலோக வெள்ளியின் மீது 18 ஃபியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ் காண்ட்ராக்ட்ஸ் (வெள்ளியின் மீது நடக்கும் டிரேடிங்கிற்கான பத்திரங்கள்) உள்ளதாகவும் COMEX அறிவித்துள்ளது. எனவே, முதலீட்டாளர்கள் திடீரென உலோக வெள்ளி வேண்டும் என்று திரண்டு வந்தால், அவர்களுக்கு கொடுக்க முடியாத தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

வெள்ளியின் மீதான விருப்பம் அதிகரிப்பு

சில்வர் இ.டி.எஃப்களின் உலகளாவிய முதலீடு 450 மில்லியன் டாலர் வரை கடந்த சில வாரங்களில் அதிகரித்துள்ளது. அதேபோல வெள்ளி அகழ்ந்தெடுக்கும் நிறுவனங்களின் பங்குகளும் நல்ல வளர்ச்சியைக் கண்டுள்ளன. இது வெள்ளி மீதான முதலீட்டாளர்களின் ஈர்ப்பைக் காட்டுகிறது.

வெள்ளி, தங்கம்

அதிகரித்து வரும் நிறுவனத் தேவை

சூரிய சக்தி மின்கலங்கள், எலெக்ட்ரிக் வண்டிகள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறைகளில் வெள்ளிக்கு அதிக தேவை இருக்கிறது. தொடர்ந்து 5-வது ஆண்டாக நிறுவனங்களின் தேவைக்கு ஈடுகொடுக்க முடியாத நிலையே நீடித்து வருகிறது. 

கடந்த 25 ஆண்டுகளில் 1100% வளர்ந்துள்ள வெள்ளி!

2000-ஆம் ஆண்டில் இந்தியாவில் 1 கிராம் வெள்ளி விலை ₹8–₹10 ஆகும். அதுவே இன்றைய விலை (ஜூன் 17, 2025) ₹ 120 ஆகும். கடந்த 25 ஆண்டுகளில் 1100% வளர்ச்சி கண்டுள்ளது. தோராயமாக, ஆண்டுதோறும் 15% (CAGR) ஆக வளர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

நாம் எப்படி பயன்பெறுவது?

அதிகரித்து வரும் தேவை மற்றும் குறைந்துவரும் உற்பத்தியால் சிறந்த முதலீட்டு வாய்ப்பாக மாறியுள்ள வெள்ளி உலகளவில் மாபெரும் அலைகளை உருவாக்கியுள்ளது. 2025-ல் முதலீடு செய்யாமல் போனால் மிகச்சிறந்த வாய்ப்பை நாம் தவறவிடக்கூடும்.

Vikatan - Laabam's 'Rise of Silver: Time to Invest?' Webinar
Vikatan - Laabam's 'Rise of Silver: Time to Invest?' Webinar

விகடன் 'லாபம்' நடத்தும் வெள்ளி குறித்த வெபினார்:

நீங்கள் வெள்ளியில் முதலீடு செய்ய வேண்டுமா? எங்கு, எப்படி, எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்? வெள்ளியை உலோகமாக வாங்கலாமா அல்லது பங்குகளாக வாங்கலாமா? விகடன் 'லாபம்' மூலம் வெள்ளி மியூச்சுவல் ஃபண்ட்ஸில் முதலீடு செய்வது எப்படி? இதை அனைத்தையும் தெரிந்துகொள்ள வரும் வியாழன் அன்று நடைபெறும் 'Rise of Silver: Time to Invest?' வெபினாரில் தவறாமல் கலந்துகொள்ளுங்கள்.

நாள்: வியாழன், ஜூன் 19, 2025

நேரம்: மாலை 7:30 மணி - 9:00 மணி

பேச்சாளர்: ஷியாம் சுந்தர், கமாடிட்டி நிபுணர்

நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கட்டணம் ஏதுமில்லை. 150 நபர்களுக்கு மட்டுமே அனுமதி. முன்பதிவு கட்டாயம். முன்பதிவு செய்ய கீழே இணைக்கப்பட்டுள்ள கூகிள் ஃபார்மை பூர்த்தி செய்யவும்.



from Vikatan Latest news https://ift.tt/pb0GDX2

Post a Comment

0 Comments