புதுக்கோட்டை போஸ் நகர், எட்டாம் வீதியை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது: 23) இவருக்கும், காந்திநகர் இரண்டாம் வீதி பகுதியைச் சேர்ந்த முகிலன் என்பவருக்கும் இடையே மது போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, தினேஷ்குமார் நண்பர்கள் முகிலனை மதுபோதையில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் இரண்டு தரப்புக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், புதுக்குளம் அருகில் உள்ள காலாகுளம் கரையில் தனியாக வந்துகொண்டிருந்த தினேஷ் குமாரை, முகிலன் உள்ளிட்ட கும்பல் அரிவாளால் வெட்டி குளத்திற்குள் தள்ளினர். குளத்திற்குள் விழுந்த தினேஷ் குமார் பரிதாபமாக உயிரிழந்தார். பட்டப் பகலில் நடைபெற்ற இந்த கொலைச் சம்பவம் குறித்து கணேஷ் நகர் காவல் நிலைய போலீஸார் முகிலன் மற்றும் அவரது கூட்டாளிகளை தீவிரமாக தேடி வந்த நிலையில் முகிலன், ஆரோக்கியதாஸ், சுமன், தீபன், பாலமுருகன் உள்பட 7 பேரை கணேஷ்நகர் காவல் நிலைய போலீஸார் கைது செய்துள்ளனர்.
from Vikatan Latest news https://ift.tt/4A03NYm
0 Comments