நாகார்ஜுனா - அமலா தம்பதியின் மகனான அகில் அக்கினேனிக்கும் ஜைனப் ரவ்ட்ஜி என்பவருக்கும் கடந்த ஜூன் 6-ம் தேதி திருமணம் நடைபெற்றது.
ஹைதராபாத்திலுள்ள நாகார்ஜுனாவின் இல்லத்தில் அகில் அக்கினேனியின் திருமணம் மிக எளிமையான முறையில் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து, ஜூன் 8-ம் தேதி ஹைதராபாத்திலுள்ள அன்னப்பூர்ணா ஸ்டூடியோஸில் இவர்கள் இருவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அகில் அக்கினேனி மூன்று வருடங்களாகக் காதலித்து திருமணம் செய்த ஜைனப் ரவ்ட்ஜி ஓவியராக இருக்கிறார்.
இவர்கள் இருவரின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உணவு மெனு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருமணத்திற்கு உணவு தயாரித்த பிரபல கேட்டரிங் சர்வீஸ், மெனுவைத் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறது.
முழுமையான சைவ உணவு அகில் அக்கினேனியின் திருமணத்தில் பரிமாறப்பட்டிருக்கிறது.
நெய் காரம் தோசை, நெய் காரம் மசாலா தோசை, நெய் காரம் உப்புமா தோசை, நெய் இட்லி, நெய் பொங்கல், வடை, உப்புமா, குலாப் ஜாமூன், ஃபில்டர் காஃபி, மாம்பழ ஜூஸ், சாத்துக்குடி ஜூஸ், தர்பூசணி ஜூஸ் ஆகிய உணவுகள் அகில் அக்கினேனியின் திருமணத்திற்குத் தயாரிக்கப்பட்டிருக்கின்றன.
இந்த உணவுகளை நாகார்ஜுனாவின் மூத்த மகன் நாக சைதன்யாவும் அவருடைய மனைவி சோபிதாவும் சாப்பிடும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
from Vikatan Latest news https://ift.tt/AqoS9YC
0 Comments