Kids hair care: குழந்தைகளுக்கான தலைமுடி பராமரிப்பு டிப்ஸ்!

இப்போதெல்லாம் ஸ்கூல் படிக்கும்போதே இளநரை வந்துவிடுகிறது. அதனால், குழந்தைப்பருவத்தில் இருந்தே தலைமுடியை நன்கு பராமரிக்க வேண்டும் என்கிற சரும நோய் நிபுணர் சந்தன், அதற்கான டிப்ஸையும் பகிர்கிறார்.

Children hair care
Children hair care

* மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, அவர்களது சருமவகைக்கு ஏற்ப குழந்தை நல நிபுணரின் பரிந்துரையின் பேரில் ஷாம்பூ பயன்படுத்த வேண்டும்.

* ஒருநா‌ள்‌வி‌ட்டு ஒருநாளாவது குழ‌ந்தையைத் தலை‌க்குக் கு‌ளி‌க்கவை‌க்க வே‌ண்டு‌ம்

* குழந்தைகளைக் குளிக்கவைக்க மிதமான சூடான வெந்நீரைப் பயன்படுத்த வேண்டும். அதிகமாகக் குளிர்ந்த அல்லது சூடான நீரைப் பயன்படுத்தக் கூடாது.

* இன்று சந்தையில் குழந்தைகளுக்கான சோப், ஷாம்பூக்கள், கண்டிஷனர்கள் பெருகிவிட்டன. தோல் தடிப்பு, சரும ஒவ்வாமை ஏற்பட்டால் ஷாம்பூ பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

baby soap

* குழந்தைகளின் சருமத்துக்குப் பயன்படுத்தும் சோப்பைத் தலைக்கும் பயன்படுத்தலாம். குழந்தையின் சருமத்துக்கு ஏற்ற சோப்பின் டி.எஃப்.எம் அளவு மற்றும் பி.ஹெச் அளவைக் குழந்தை நல மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு அதற்கேற்ற சோப்பைத் தேர்வுசெய்ய வேண்டும்.

* குழந்தைகளுக்கு அவர்களுக்கான பிரத்யேகமான ஷாம்பூ போட்டுத் தலைக்குக் குளிக்கவைக்கும்போது, ஷாம்பூ தலையில் இருந்து முற்றிலுமாக வெளியேறும்படி நன்கு கழுவ வேண்டும்.

* குழந்தைகளுக்காகப் பயன்படுத்தப்படும் ஷாம்பூவை, பெரியவர்கள் பயன்படுத்தக் கூடாது.

* குழந்தைகளுக்கு எண்ணெய் மசாஜ் செய்ய சுத்தமான நல்லெண்ணையைப் பயன்படுத்தலாம். நல்லெண்ணெயை கண், காது, மூக்கு, வாய் ஆகிய பகுதிகளில் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அத்தி
அத்தி

* குழ‌ந்தை ‌பிற‌ந்த ‌சில மாத‌ங்களு‌க்கு உச்சந்தலை‌யி‌ல் எ‌ண்ணெ‌ய் தே‌ய்‌ப்பதைத் த‌வி‌ர்‌க்க வேண்டும். குழ‌ந்தை‌யி‌ன் தலை‌யி‌ல் எ‌ண்ணெ‌ய் தே‌ய்‌ப்பதா‌ல், ‌க்ராடி‌ல் கே‌ப் (Cradle cap) என்கிற பிரச்னை ஏற்பட்டு முடி உதிர்வு ஏற்படும்.

* குழந்தைகளுக்கு முடி எந்தப் பக்கம் போகிறதோ, அதன் போக்கில்தான் குழந்தைகளுக்கான சீப்பில் தலை சீவ வேண்டும். அதற்கு எதிர்த்திசை நோக்கி சீவக் கூடாது. இதனால், முடி உதிர்வு ஏற்படும்.

அத்திப்பழத்தில் அதிக அளவு இரும்புச்சத்து உள்ளது. அத்திப்பழத்தோடு, அரை கப் பால், அரை கப் ஆரஞ்சு ஜூஸ், நறுக்கிய வாழைப்பழம், தேங்காய், பாதாம் பருப்பு சேர்த்து நன்கு கலக்கி, ஃபிரிட்ஜில் சிறிது நேரம் வைத்திருந்த பின், இந்த ஸ்மூதியை வளரும் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். இதனால், அவர்களது முடி வளர்ச்சி மற்றும் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR



from Vikatan Latest news https://ift.tt/yR1GnuK

Post a Comment

0 Comments