Thalaivan Thalaivi: ``இது கணவன் - மனைவி உறவைப் பேசுகிற படம்!'' - இயக்குநர் பாண்டிராஜ்

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியிருக்கும் 'தலைவன் தலைவி' திரைப்படம் இம்மாதம் 25-ம் தேதி வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது.

விஜய் சேதுபதி, நித்யா மேனன், காளி வெங்கட், சரவணன், ரோஷினி என நட்சத்திரப் பட்டாளங்கள் பலரும் இணைந்து நடித்திருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

Thalaivan Thalaivi
Thalaivan Thalaivi

படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வின் ரெட் கார்பெட்டில் வைத்து செய்தியாளர்களிடம் படக்குழுவினர் திரைப்படம் தொடர்பாகப் பேசியிருக்கின்றனர்.

பாண்டிராஜ் பேசுகையில், "'நம்ம வீட்டுப் பிள்ளை' திரைப்படத்திற்குப் பிறகு என்னுடைய படத்திற்கு நடக்கும் இசை வெளியீட்டு விழா இதுதான்.

ஆறு வருஷம் கழிச்சு என்னுடைய படத்துக்கு இசை வெளியீட்டு விழா நடக்குது. இந்தப் படத்தின் நடிகர்கள் தேர்வைப் பார்த்து விஜய் சேதுபதி சார், 'எப்படி எல்லோரையும் புடிச்சு நடிக்க வச்சீங்க?'னு கேட்டாரு. அனைவருமே அவர்களுடைய பங்கை அற்புதமா பண்ணியிருக்காங்க.

இயக்குநர் பாண்டிராஜ்
இயக்குநர் பாண்டிராஜ்

சந்தோஷ் நாராயணனும் நானும் முதல் முறையா இந்தப் படத்துல இணைந்திருக்கோம். இன்னைக்கு 'தலைவன் தலைவி' படத்தின் பாடல்களை வெளியிடுறோம்.

இது ரொம்பவே முக்கியமான நாள். இதுக்காகத்தான் நாங்க காத்திருந்தோம். இது கணவன்-மனைவி உறவைப் பேசுற திரைப்படம். எல்லோருக்கும் இந்தத் திரைப்படம் நிச்சயமாக கனெக்ட் ஆகும்.

'A Rugged Love Story'னு டைட்டில் போட்டதுக்கு நியாயம் செய்யுற மாதிரி இந்தத் திரைப்படம் இருக்கும்," என்றார்.



from Vikatan Latest news https://ift.tt/4fvGFZ7

Post a Comment

0 Comments