Beauty: சருமம் பளபளப்பா இருக்க வீட்டுக்குள்ள ஒரு பியூட்டி பார்லர்!

கிட்டத்தட்ட எல்லா சீசனிலும் வெயிலடிக்கிறது. திடீரென இரவில் மழை பெய்கிறது. காலையிலோ சுளீரென வெயில் காய்கிறது. அதில் இருந்து இயற்கையான முறையில் சருமத்தை எப்படிக் காப்பது என சொல்கிறார் சித்த மருத்துவர் தமிழ்க்கனி.

Beauty
Beauty

* வீட்டைவிட்டு வெளியே செல்வதற்கு முன்னர் வெயில்படும் இடங்களில் குறிப்பாக கை, கால்களில் செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயை லேசாக தேய்த்துக்கொள்ளலாம். இது புற ஊதாக் கதிர்களின் பாதிப்பிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கும்.

* உடலில் வெயில்படும் இடங்களில் எலுமிச்சைச் சாற்றுடன் தேன் சேர்த்து, ஒரு மணி நேரம் ஊறவைத்துக் கழுவ வேண்டும். இது சிறந்த கலரிங் ஏஜென்ட்டாகச் (Coloring Agent) செயல்படும். சருமத்தில் எண்ணெய்ப் பிசுபிசுப்பை நீக்கும்; நிற மாற்றத்தைச் சரிசெய்யும்.

Beauty

* பப்பாளி, வாழைப்பழம் ஆகியவற்றைத் தோல் நீக்கி, சதைப் பகுதியை மட்டும் விழுதாக அரைத்து ஒருநாள்விட்டு ஒருநாள் ஃபேஸ் பேக்காகப் பயன்படுத்தலாம். இதிலுள்ள கரோட்டினும், வைட்டமின் சத்துகளும் சருமத்தை மிருதுவாக்கும்.

* தக்காளி, கடலை மாவு, சந்தனத்தை பேஸ்ட் ஆக்கி, காலை நேரத்தில் ஃபேஸ் பேக்காக அப்ளை செய்வது சரும வறட்சியைத் தடுக்கும். இதில் சந்தனம் உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கும்; கடலை மாவு, இறந்த செல்களை நீக்கும்; தக்காளி, சிறந்த கலரிங் ஏஜென்ட்டாகச் செயல்படும். ஆகவே இவற்றை மொத்தமாகச் சேர்த்துப் பயன்படுத்தலாம்; தனித்தனியாகவும் பயன்படுத்தலாம்.

Beauty Tips
Beauty Tips

* சூரியனின் கதிர்களால் சிலருக்கு சருமத்தில் கருமை படரும். இதை `சன் டேனிங்’ என்பார்கள். இந்தப் பிரச்னைக்கு வெள்ளரிக்காய், தக்காளி, உருளைக்கிழங்கு போன்றவற்றைத் துண்டு துண்டாக நறுக்கி, நிறம் மாறிய பகுதிகளில் வைக்கவும். மூன்றையும் ஒரே நாளில் பயன்படுத்தாமல் ஒருநாள் தக்காளி, மறுநாள் வெள்ளரி என மாற்றிப் பயன்படுத்துவது நல்லது.''

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR



from Vikatan Latest news https://ift.tt/Zgkz7Uo

Post a Comment

0 Comments