இளமையையும், அழகையும் குறைக்குமா சர்க்கரை? டயட்டீஷியன் சொல்வது என்ன?

’’சர்க்கரை விஷயத்தில் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்.

அழகு தொடங்கி ஆரோக்கியம் வரை பல பிரச்னைகளை சர்க்கரை ஏற்படுத்தும்’' என எச்சரிக்கிறார் டயட்டீஷியன் சுஜாதா.

சர்க்கரை மறைந்திருப்பதைப் பலரும் அறிவதில்லை.
சர்க்கரை மறைந்திருப்பதைப் பலரும் அறிவதில்லை.

’’ `ஒருவர் நாளொன்றுக்கு ஐந்து டீஸ்பூன் வரை சர்க்கரை பயன்படுத்தலாம்’ என்று அறிவுறுத்துகிறது உலக சுகாதார நிறுவனம். அதிகமாகச் சேர்த்துக்கொண்டால், அதிலுள்ள குளுக்கோஸ் மற்றும் ஃப்ரக்டோஸ் உடலில் சேர்ந்து தேவையில்லாத உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.

கார்பனேட்டட் பானங்கள், குளிர்பானங்கள், பேக்கரி உணவுகள் என நாம் அன்றாடம் சாப்பிடும் பல்வேறு உணவுகளில் சர்க்கரை மறைந்திருப்பதைப் பலரும் அறிவதில்லை.

* அளவுக்கு மீறி சர்க்கரை சேர்த்துக்கொள்ளும்போது, பசி உணர்வு அதிகரிக்கும். சர்க்கரையிலிருக்கும் ஃப்ரக்டோஸ்தான் அதற்குக் காரணம்.

‘எவ்வளவு சாப்பிட்டாலும், அடுத்த சில மணி நேரத்திலேயே பசி எடுக்கிறது’ என்பவர்கள், சர்க்கரையின் அளவை கவனிக்க வேண்டும். அடிக்கடி செரிமானக் கோளாறுகள் ஏற்பட்டாலும், உணவில் சர்க்கரையின் அளவை கவனிக்க வேண்டும்.

இளம் வயதில் சருமத்தில் தளர்ச்சியா..?
இளம் வயதில் சருமத்தில் தளர்ச்சியா..?

* அதிகப்படியான சர்க்கரை, சரும ஆரோக்கியத்துக்கான `கொலாஜென்’ மற்றும் `எலாஸ்டின்’ போன்ற புரதங்களின் தரத்தைக் குறைக்கும். இதனால் சருமம் பொலிவிழந்து தளர்ச்சியடையும். இளம் வயதில் சருமத்தில் தளர்ச்சியை உணர்ந்தால் சர்க்கரையின் அளவை உடனடியாகக் குறைக்க வேண்டும்.

* தினமும் அளவுக்கதிகமாக சர்க்கரை சேர்த்த உணவுகளை உட்கொள்பவர்களுக்கு பல் மற்றும் ஈறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படலாம்.

பற்களில் அடிக்கடி பிரச்னையா..?
பற்களில் அடிக்கடி பிரச்னையா..?

* அதிக அளவு சர்க்கரையால் உடலின் பல பகுதிகளில் கெட்ட கொழுப்பு சேரும். இதனால், இடுப்பு மற்றும் அடிவயிற்றுப் பகுதிகள் பருத்து, தொப்பை ஏற்படலாம்.



from Vikatan Latest news https://ift.tt/VcUReaf

Post a Comment

0 Comments