விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் வரும் 29ஆம் தேதி பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் நடைப்பயணம் மேற்கொண்டு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார்.
அதற்கான ஏற்பாடுகள் குறித்து நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்டச் செயலாளர் செல்வம் தலைமையில், மாநிலப் பொருளாளர் திலகபாமா முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த திலகபாமா கூறுகையில்,
வரும் 29ஆம் தேதி அன்புமணி சிவகாசியில் நடைப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் அதில் திரளான மக்கள் கலந்து கொள்வார்கள் எனவும் தெரிவித்தார்.
"அன்புமணியை தலைவராக நீட்டித்த தேர்தல் ஆணையத்தின் ஆவணம் தவறானது எனக் கூறும் ஜி.கே.மணி, அதற்கான ஆதாரமாக ஆவணத்தை வெளியிட வேண்டும்.
பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது. அந்தக் கடிதத்தை நாங்கள் வெளியிட்டுள்ளோம். அதற்கு மேல் அவர்கள் என்ன செய்ய வேண்டுமோ செய்யட்டும்.
பா.ம.க என்பது ஒன்றுதான். தலைவராக அன்புமணியை மக்கள் நம்பத் தயாராகி விட்டார்கள். மருத்துவர் ராமதாஸ் கூறிவரும் கருத்துக்களைப் பொருட்படுத்தாமல் மக்கள் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.
from Vikatan Latest news https://ift.tt/U3nNK17
0 Comments