கடந்த சில மாதங்களாக, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் முட்டி மோதிக்கொண்டுதான் இருந்தன. இப்போது இந்த முட்டல், மோதல் பெரும் தாக்குதலாக உருமாறி உள்ளது.
இன்று அதிகாலை ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளது. அதில் அங்கு இருந்த மருத்துவமனை ஒன்றில் கிட்டத்தட்ட 400 பேர் உயிரிழந்துள்ளனர்... 250 பேர் காயமடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் சொல்லும் குற்றச்சாட்டு
இது குறித்து ஆப்கானிஸ்தானின் துணை அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஹம்துள்ளா ஃபித்ரத் கூறுகையில், "ஆப்கானிஸ்தானின் உள்ளூர் நேரப்படி இரவு 9 மணிக்கு, பாகிஸ்தான் போதை மறுவாழ்வு மருத்துவமனை மீது வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது.
இதில் 2,000 படுக்கை வசதிகள் கொண்ட கட்டடம் தகர்க்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பாகிஸ்தானின் இந்தச் செயலை மனிதநேயத்திற்கு எதிரான குற்றம் என்று ஆப்கானிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.
மறுக்கும் பாகிஸ்தான்
ஆனால், ஆப்கானிஸ்தானின் இந்தக் கூற்றை, 'நாங்கள் எந்தவொரு மருத்துவமனை மீதும் தாக்குதல் நடத்தவில்லை' என்று பாகிஸ்தான் மறுக்கிறது.
ஆப்கானிஸ்தானின் ராணுவத் தளவடங்கள் மீதுதான் தாக்குதல் நடத்தினோம் என்று பாகிஸ்தான் கூறுகிறது.
from Vikatan Latest news https://ift.tt/YysdhQz
0 Comments