Doctor Vikatan: உணவு உண்ணும்போது தொண்டையை அடைக்கும் உணர்வு... சிகிச்சை தேவையா?

Doctor Vikatan:  என் வயது 40. எனக்கு கடந்த சில மாதங்களாக உணவு உண்ணும்போது தொண்டையில் உணவு அடைத்துக் கொள்வது போன்ற உணர்வு ஏற்படுகிறது. தொண்டையிலிருந்து உணவு இறங்க சில நிமிடங்கள் ஆகின்றன.

அதன் பிறகே இயல்பு நிலைக்கு வருகிறேன். இது என்ன மாதிரியான பிரச்னை... இதற்குச் சிகிச்சை அவசியமா?

பதில் சொல்கிறார், கோயம்புத்தூரைச் சேர்ந்த உணவியல் மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகர் வர்ஷா செந்தில்குமார்

உணவியல் மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகர் வர்ஷா செந்தில்குமார்
உணவியல் மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகர் வர்ஷா செந்தில்குமார்

நாம்  உண்ணும்  உணவு தொண்டையில் அடைத்துக் கொள்வதை மருத்துவ மொழியில் 'டிஸ்ஃபேஜியா' (Dysphagia) என்று  சொல்வோம். இதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.
உணவை விரைவாகச் சாப்பிடுவது, உணவைச் சரியாக மென்று (chew) சாப்பிடாமல் அவசரமாக விழுங்குவது, சாப்பிடும் உணவு மிகவும் வறட்சியாக (Dry) இருப்பது, அதாவது உணவில் நீர்ச்சத்தோ அல்லது ஈரப்பதமோ (Moisture content) இல்லாமல் இருப்பது, சாப்பிடும்போது பேசிக்கொண்டே சாப்பிடுவது, கவனம் சிதறி சாப்பிடுவது அல்லது அதிக மன அழுத்தத்துடன் (Stress) சாப்பிடுவது போன்றவை இந்தப் பிரச்னைக்கான முதன்மைக் காரணங்களாக இருக்கலாம்.

ஆசிட் ரிஃப்ளெக்ஸ் (Acid Reflux) எனப்படும் எதுக்களித்தல் பிரச்னை, நாம் சாப்பிடும் உணவு உணவுக்குழாயில் இறங்காமல் இருப்பது, அதிக காரமான (Spicy), அதிக எண்ணெய் சேர்த்த (Oily) உணவுகள், காபி மற்றும் டீ போன்றவற்றை எடுத்துக்கொள்வது போன்றவை உடல்நலம் மற்றும் உணவு சார்ந்த காரணங்களாக இருக்கலாம். 

உடலில் நீர்ச்சத்து குறையும் போது எச்சில் (Saliva) சுரப்பது குறையும். இதனாலும் உணவை விழுங்குவது கடினமாகலாம்.  இரும்புச்சத்து (Iron), வைட்டமின் பி 12 மற்றும் வைட்டமின் டி குறைபாடு இருந்தால் தொண்டை தசைகள் (Throat muscles) பலவீனமடையலாம்.

ஆசிட் ரிஃப்ளெக்ஸ் (Acid Reflux) எனப்படும் எதுக்களித்தல் பிரச்னை, நாம் சாப்பிடும் உணவு உணவுக்குழாயில் இறங்காமல் இருப்பது, அதிக காரமான (Spicy), அதிக எண்ணெய் சேர்த்த (Oily) உணவுகள், காபி மற்றும் டீ போன்றவற்றை எடுத்துக்கொள்வது போன்றவை உடல்நலம் மற்றும் உணவு சார்ந்த காரணங்களாக இருக்கலாம்.

புரதச்சத்து (Protein) எடுத்துக் கொள்வது குறைவாக இருந்தாலும் விழுங்குவதில் சிரமம் (Swallowing difficulty) அதிகரிக்கும்.

சாப்பிடும் உணவு நல்ல மென்மையாகவும் (Soft), ஈரப்பதத்துடனும் (Moist) இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். உதாரணத்துக்கு, தயிர் சாதம், கிச்சடி, வேகவைத்த காய்கறிகள் (Steamed vegetables), முட்டை போன்றவற்றை எளிதாகச் சாப்பிடலாம்.

சாப்பிடும்போது முக்கியமான 3 விதிகளைக் கவனத்தில் கொள்ளவும். உணவைச் சிறிய அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதை நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.
சாப்பிடும்போது இடையே சிறிதளவு தண்ணீர்  குடித்துக்கொள்ளலாம்.

உணவை உண்பதில் ஒரு வரிசையைப் பின்பற்ற வேண்டும். முதலில் புரதச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும். அடுத்து நார்ச்சத்து (Fiber) நிறைந்த உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். இறுதியாக கார்ப்போஹைட்ரேட் (Carbs) உணவைச் சாப்பிட வேண்டும். இவ்வாறு சாப்பிடுவதால் உணவு, தொண்டையில் வறண்டு போவதைத் தவிர்க்கலாம்.

முதலில் புரதச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும். அடுத்து நார்ச்சத்து (Fiber) நிறைந்த உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். இறுதியாக கார்ப்போஹைட்ரேட் (Carbs) உணவைச் சாப்பிட வேண்டும்

அதிக காரமான, அதிக சூடான அல்லது மிகவும் குளிர்ந்த உணவுகள், கார்பனேட்டடு பானங்கள் (Carbonated drinks) மற்றும் மதுபானங்கள் (Alcohol), ஒட்டும் தன்மையுள்ள பிரெட் போன்ற உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.  சாப்பிட்ட உடனே படுக்கக்கூடாது. சாப்பிட்ட பிறகு குறைந்தது 30 நிமிடங்கள் நேராக நிமிர்ந்து உட்கார்ந்த (Upright position) பிறகே படுக்கச் செல்ல வேண்டும்.
இவற்றை எல்லாம் பின்பற்றுவதன் மூலம் தொண்டையில் உணவு அடைக்கும் பிரச்னையைத் தடுக்க முடியும். இதையும் மீறி, பிரச்னை தொடர்ந்தால் மருத்துவரை அணுகி, ஆலோசனை பெறுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 



from Vikatan Latest news https://ift.tt/LCltMw7

Post a Comment

0 Comments